SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை, திருப்பூரில் வங்கி கடனுக்கு வட்டி செலுத்தாததால் 5 ஆயிரம் விசைத்தறிகளுக்கு சீல் பழைய இரும்புக்கு விற்பனை

2017-11-15@ 00:56:43

கோவை : கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு ஒப்பந்தப்படி நெசவு கூலி வழங்காமல், 8 ஆண்டுக்கு முந்தைய கூலியை வழங்குவதால், நஷ்டமடைந்துள்ள விசைத்தறியாளர்கள் வங்கி கடனுக்கான வட்டி செலுத்த முடியவில்லை. இதனால், கடந்த 6 மாதத்தில் 2 மாவட்டங்களிலும் 5 ஆயிரம் விசைத்தறிகளுக்கு வங்கிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை விசைத்தறியாளர்கள் பழைய இரும்புக்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும்  விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டு கமிட்டி தலைவர் வேலுசாமி கூறியதாவது:

மீட்டருக்கு ரூ.5 வழங்க வேண்டிய கூலியை ரூ.3 மட்டும் வழங்கி வருகின்றனர். இதனால் மீட்டருக்கு ரூ.2 நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் வங்கிகளுக்கு வட்டிகூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு, 5 ஆயிரம்  விசைத்தறிகளுக்கு வங்கி நிர்வாகம் ‘சீல்’ வைத்துள்ளது. இதுதவிர 5 ஆயிரம் விசைத்தறிகளை விசைத்தறியாளர்கள் பழைய இரும்பு கடைக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த நிலை தொடர்வதால், விசைத்தறி தொழிலை பாதுகாக்க ஒப்பந்த கூலியை உடனடியாக வழங்க வேண்டும்.

இது தொடர்பாக, திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டு கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் பல்லடத்தில் நடந்தது. இதில் முதல்வரை சந்திப்பது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இரு மாவட்டத்திலும் பகுதி வாரியாக விசைத்தறியாளர்கள் சங்க கூட்டம் நடத்தி முடிவெடுப்பது, என தீர்மானிக்கப்பட்டது என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்