SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் கடையில் ஸ்டாக் வைத்திருந்த 11,000 மது பாட்டில்களை அள்ளிச்சென்ற போலீஸ்

2017-11-15@ 00:55:57

திண்டுக்கல் : மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்திக்காக மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் 27 முதல் 30ம் தேதி வரை 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் விடுப்பு அளிக்கப்பட்டன. இதனால் ‘ஆடிப்போன குடிமகன்கள்’ பக்கத்து மாவட்ட எல்லையான திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் கடை செயல்படுவதை அறிந்து அங்கு படையெடுத்தனர். வழக்கமாக நத்தம் கோவில்பட்டி டாஸ்மாக்கில் பல மடங்கு கூடுதலாக சரக்குகளை டாஸ்மாக் நிர்வாகத்திடம் ஊழியர்கள் கேட்டனர். இதன்பின்னர் வந்த சுமார் 359 சரக்கு பெட்டிகளை (சுமார் 11 ஆயிரம் பாட்டில்கள்) அருகில் உள்ள பாரில் இறக்கி வைத்தனர். கடந்த 29ம் தேதி சிறப்பு ஆய்வு காவல்படை, கடை மற்றும் பாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பாரில் இருந்த சரக்குகளை மொத்தமாக அள்ளிச் சென்றனர்.

மிரண்டு போன ஊழியர்கள், ரசீது உள்ளிட்டவற்றை காட்டியும் போலீசார் திரும்ப வழங்கவில்லை. டாஸ்மாக் நிர்வாகமும் ஒத்துழைக்காததால் மேற்பார்வையாளர் செல்வம், நத்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆவணங்களை பார்த்த நீதிமன்றம் உடனடியாக அவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘‘பணியும் நிரந்தரம் இல்லை. பிரச்னை வந்தால் டாஸ்மாக் நிர்வாகமும் உதவி செய்வதில்லை. அரசியல் அழுத்தங்களில் நாங்கள்தான் இப்படி இடையில் சிக்கி பரிதவிக்க வேண்டியதுள்ளது’’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SwanCountingEngland

  இங்கிலாந்தில் மகாராணி எலிஸபெத்திற்கு சொந்தமான அன்னப்பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

 • MilkProtestMaharashtra

  மகாராஷ்டிரத்தில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டம்: பால் விலையை ஏற்றக் கோரிக்கை

 • CrocodilesIndonesia

  300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

 • trumpputinmeet

  பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

 • obamakenya

  கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்