SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடோனில் உளுந்துக்கு பதில் உமி ரூ.80 கோடி கடன் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க வங்கி மனு

2017-11-15@ 00:54:26

மதுரை : தனியார் வங்கியின் உதவி துணைத்தலைவர் ரங்கராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிறுவன குடோன்களில் 1.21 லட்சம் டன் உளுந்து இருப்பதாகக்கூறி அடமான கடன் கேட்டு 2016ல் சிலர் எங்களை அணுகினர். இதனடிப்படையில், மதுரை மற்றும் விருதுநகர் வங்கி கிளை மூலம் ரூ.80 கோடி  கடன் வழங்கினோம். பின்னாளில் குடோனில் ஆய்வு செய்தபோது, குறைந்தளவில் உளுந்தும், அதிகளவில் உளுந்து உமியும் இருந்தது. அதிகளவு உமியை வைத்து வங்கியில் மோசடியாக கடன் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து போலீசில் அளித்த புகார் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறப்பட்டிருந்தது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ‘குடோனில் இருப்பு உள்ளதாகக் கூறி வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. குடோன்கள் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளதால் விருதுநகர் எஸ்பி இன்று ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்