SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்புமணி மீதான ஊழல் வழக்கை மறந்து விட்டு திமுகவை குறை கூறுவதா?

2017-11-15@ 00:50:01

சென்னை : அன்புமணி மீதான ஊழல் வழக்கை மறந்து விட்டு திமுக மீது குறை கூறுவதா? என்று ராமதாசுக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்முடி, எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை மத்தியில் இருந்த காங்கி ரஸ், திமுக கூட்டணி புகுத்தியது என்று கூறியிருக்கிறார். மருத்துவராகப் பட்டம் பெற்றுள்ள அவர் மருத்துவக் கல்விக்காக திமுக செய்த அளப்பரிய சாதனைகளையும், அதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மருத்துவர் களாக ஆன விவரங்களை வசதியாக மறந்து அல்லது மறைத்து விட்டு திமுக மீது புழுதி வாரி இறைப்பதிலேயே புதுசுகம் காணுகிறார்.

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதை முதன் முதலில் இந்தியாவில் எதிர்த்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்பதை ஏனோ ராமதாஸ் வசதியாக மறந்து விட்டார். அது மட்டு மின்றி, அன்று முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டே நீட் தேர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை நீட் தேர்வு நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி தான் என்பது அசைக்க முடியாத வரலாறு. நீட் தேர்வுக்கு எதிராக தடையுத்தரவு பெற்றதோடு மட்டுமின்றி, திமுக ஆட்சியில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு, நீட் தேர்வு செல்லாது என்று தீர்ப்பளித்தது என்பதை ராமதாஸ் அரசியல் காரணத்திற்காக மறந்திருந்தால் நினைவூட்ட விரும்புகிறேன்.

மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்தது சம்பந்தமாக அன்புமணி மீது தற்போது நடைபெற்றுவரும் ஊழல் வழக்கை மறந்து விட்டு, மறைந்த வாழப்பாடி ராம மூர்த்தி, ராமதாஸ் பற்றி புத்தகம் அச்சிட்டு வெளியிட்டதையும் மறைத்து விட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ராமதாஸ் தனியாக பாராட்டு கூட்டம் போட்டு வாழ்த்தியது, வன்னியர் சமுதாயத்திற்கு எண்ணற்ற நலத்திட்டங்களை உருவாக்கித் தந்தது போன்ற திமுக ஆட்சியின் சாதனைகளை  திரையிட்டு மூடிவிட்டு, ராமதாஸ் அறிக்கை விட்டிருப்பதால் வன்னியர் சமுதாயத்திற்கு ஏதேனும் பலன் கிடைக்கும் என்றால் திமுக அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள் ளும். திமுக மீதான விமர்சனத்தால் அந்த சமுதாயத்திற்குத் துளியேனும் நன்மை கிடைக்கும் என்றால் என்றென்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் உள்ளிட்ட அனைத்து சமுதாய ங்களும் முன்னேற வேண்டும் என்பதில் கருணாநிதி போல் மு.க.ஸ்டாலினும் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்தான் என்பதை ராமதாசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தண்ணீரில் மரக்கட்டைபோல் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன் அரசியல் நிலைப்பாட் டின் மூலம் திமுக என்ற ஆலமரத்தினை அசைத்துப் பார்த்திட கனவு கண்டால் அது ஒரு போதும் நடக்காது, பகல் கனவாகிவிடும் என்பதை ராமதாஸ் உணர வேண்டும். சசிகலா உறவினர்கள் மீதான வருமான வரித்துறையின் அந்த ரெய்டை விமர்சிப்பதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் திமுகவையும் சேர்த்து விமர்சித்து, வன்னியர் சமுதாயத்தில் அங்கும் இங்குமாகத் தனக்கு இருக்கும் ஆதரவையும் முழுவதுமாக இழந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்