SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுநீர் மூலம் உரம் தயாரிக்கும் திட்டம் சேகரித்து வரும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ₹1 வீதம் வழங்கப்படும்

2017-11-15@ 00:49:22

நாக்பூர் : மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் நேற்று அளித்த பேட்டி: மனிதர்களின் சிறுநீர் மூலம் உரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு தாலுகா அளவிலும் சிறுநீர் வங்கி(யூரின் பாங்க்) தொடங்கப்படும். சிறுநீர் மூலம் உரம் தயாரிக்கலாம். இவ்வாறு தயாரித்தால் வெளிநாடுகளில் இருந்து யூரியா இறக்குமதி செய்வது குறையும். சிறுநீர் மூலம் உரம் தயாரிக்கும் திட்டம் இப்போது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. நமது நாட்டு விஞ்ஞானிகளுடன் இது குறித்து தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மனிதர்களின் சிறுநீரில் ஏராளமான நைட்ரஜன் உள்ளது. ஆனால், அதனை நாம் வீணாக்கி கொண்டிருக்கிறோம். ஒரு கழிவு பொருளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம். சிறுநீர் மூலம் உரம் தயாரிக்கும் திட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றுக்கு மாற்றாக நாம் ஏற்கனவே இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகிறோம். இதனுடன் நைட்ரஜனையும் சேர்த்தால் வேளாண் உற்பத்தியை மேலும் பெருக்க முடியும்.

இதனால் ஒவ்வொரு தாலுகா அளவிலும் சிறுநீர் வங்கி தொடங்கப்படும். இங்கு விவசாயிகள் சிறுநீரை கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இதற்காக அரசங்காமே விவசாயிகளுக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களை கொடுக்கும். அந்த கேன்களில் விவசாயிகள் சிறுநீரை சேகரித்து சிறுநீர் வங்கிக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இதற்காக ஒரு லிட்டர் சிறுநீருக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். முதற்கட்டமாக நாக்பூர் மாவட்டம் தப்பேவாடா கிராமத்தில்(நிதின் கட்கரியின் சொந்த ஊர்) லேப்ரட்டரி அமைக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்