SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதம் கடந்து மக்களை காப்போம் : கமல் டிவிட்

2017-11-15@ 00:47:54

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டரில், ‘அகில இந்திய விவசாயிகள் கட்சி வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர். சேர்க. இது முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களை காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்’ என தெரிவித்துள்ளார். கேரள அரசு நடவடிக்கை: கேரளாவைச்  சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிடத்  தேவையில்லை என்று அந்த மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து இன்னொரு டிவிட்டர் பதிவில் கமல்ஹாசன், ‘மீண்டும் கேரள அரசு  துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளது.

உங்கள் சுற்றறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனது  மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக்  குறிப்பிட மறுத்து விட்டேன். 21 வயதைக் கடந்த பிறகு ஸ்ருதிஹாசன் இந்து மதத்தைத் தேர்வு செய்தார். அக்‌ஷராஹாசன் சாதி, மதம் இல்லாமல்  வாழ முடிவெடுக்கலாம்'' என்று கூறியுள்ளார். ரஜினி நன்றி:  என்டிஆர் தேசிய திரைப்பட கவுரவ விருது  கிடைத்ததற்காக தனக்கு வாழ்த்து தெரி வித்த கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த்  டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு  என்டிஆர் தேசிய திரைப்பட கவுரவ விருது அளித்த ஆந்திர அரசுக்கும் அவர் டிவிட்டரில் நன்றி தெரிவித் துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Greecemilitarydictatorship

    கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்