SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு நிலம் ஆக்ரமிப்பு விவகாரம் : கேரளா அமைச்சர் தாமஸ் பதவி விலகுவதுதான் நல்லது

2017-11-15@ 00:47:18

திருவனந்தபுரம் : கேரள போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் தாமஸ் சாண்டி. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், இதே கட்சியை சேர்ந்த சசீந்திரன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த ஏப். 1ம் தேதி அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்கு சொந்தமாக ஆலப்புழாவில் ஒரு ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட்டுக்காக அரசு நிலத்தை ஆக்ரமித்ததாக தாமஸ் சாண்டி மீது புகார் எழுந்தது. ஆலப்புழா கலெக்டர் அனுபமா விசாரணையிலும் இது உறுதியானது.

ஆனால் இந்த விசாரணை அறிக்கையை எதிர்த்து அமைச்சர் தாமஸ் சாண்டி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் ரவீந்திரன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, ‘‘அமைச்சராக இருந்து கொண்டே அரசை எதிர்த்து வழக்கு தொடருவது எங்குமே கேள்விப்படாத ஒன்றாகும். எனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதுதான் அவருக்கு நல்லது’’ என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்