SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனில் அம்பானி நிறுவனத்துடன் கூட்டு தயாரிப்பு ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விதிமுறை மீறல்

2017-11-15@ 00:46:04

புதுடெல்லி : விமானப்படை பயன்பாட்டுக்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2012ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. 18 விமானங்களை பிரான்சிலிருந்து ரெடிமேடாகவும், 108 விமானங்களை பெங்களூர் எச்.ஏ.எல் நிறுவனத்தில் இணைத்து தயார் செய்து தரவும் முடிவு செய்யப்பட்டது. 2014ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம் மேற்கொண்டபோது 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி டசால்ட் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்து விமானங்களை தயாரித்து கொடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் தொழிலதிபர் அனில் அம்பானி ‘ரிலயன்ஸ் டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தை தொடங்கினார். பிரான்ஸ் நாட்டுடன் ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தான 10 நாட்களுக்குப்பின்,  பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் நிறுவனம் செய்தது.

டசால்ட் நிறுவனம் 49% சதவீத முதலீடு, ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் 51% சதவீத முதலீட்டில் விமானத்தை இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அனில் அம்பானி நிறுவனத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி சென்றது. நிதி நெருக்கடியில் இருந்து அனில் அம்பானிக்கு இது மிகப்பெரிய தொகை. கூட்டு தயாரிப்புக்கு டசால்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்கை இன்னும் முதலீடு செய்யாமல், டசால்ட் நிறுவனத்தை மேலும் முதலீடு செய்ய சொல்லி அனில் அம்பானி வற்புறுத்தி வருகிறார். இதனால் டசால்ட் நிறுவனம் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அக்கறை என்ன? என டிவிட்டரில் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. ராணுவ கொள்முதல் நடைமுறையில் விதிமீறல் நடந்துள்ளது. தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் அரசு நிறுவனமான எச்.ஏ.எல்.க்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு, பிரதமர் மோடியின் தொழிலதிபர் நண்பர் நிறுவனத்துக்கு சென்றுள்ளது. நாட்டு நலன் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்து மன்னிக்க முடியாத விளையாட்டில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது ’’ என கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்