SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் கலந்துரையாடி ஏக்கம் இல்லா மகிழ்ச்சி தருவோம்

2017-11-14@ 15:19:48

ஐக்கிய நாட்டு குழந்தைகள் உரிமைகள் மாநாட்டு தீர்மானத்தின்படி குழந்தை உரிமைகள் தலைப்புகளில் விரிவாக வகுக்கப்பட்டுள்ளது. அவை வாழ்வதற்கான உரிமைகள், பாதுகாப்பதற்கான உரிமைகள், பங்கேற்கும் உரிமைகள், வளர்ச்சிகான உரிமைகள் ஆகியவை ஆகும். அதன்படி வாழ்வாதற்கான உரிமைகளின்படி பிற்பதற்கும், அடிப்படை மற்றும் தரமான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், குடிநீர், ஆரோக்கியம், வழங்கப்படுவதோடு குழந்தைகள் தரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். பாதுப்பான உரிமைகள் என்பது வன்முறை, போதை பொருட்களில் இருந்தும், உடல், மனம், பாலியல் ரீதி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

பங்கேற்கும் உரிமைகள் என்பது குழந்தைகளின் கருத்துக்கள், எண்ணங்கள், தகவல்கள் மதிக்க வேண்டும். அதோடு வழிகாட்டுதலோடு முடிவு எடுக்கும் உரிமை தரப்பட வேண்டும். வளர்ச்சிக்கான உரிமைகளின்படி விருப்பமான படிப்பு, விளையாடுதல் உரிமை அவர்களின் உடல், மனம், எண்ணங்களின் வெளிப்பாடு ஆகியவை வளர்வதற்கான உரிமை, தாங்களின் மதம், கலாச்சாரம் சார்ந்த உரிமைகள் தரப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

இது குறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் மோகன் கூறுகையில்: இந்தியாவின் மக்கள் தொகையில் 61சதவீதம் குழந்தைகள். இதில் 6 முதல் 15வயது குழந்தைகள் 55சதவீதம். இதில் ஆண் குழந்தைகள் 52சதவீதம், பெண் குழந்தைகள் 48சதவீதம் இருக்கின்றனர். இதில் 73சதவீதம் குழந்தைகள் கிராம பகுதியிலும், 27சதவீதம் குழந்தைகள் நகரப்புரத்திலும் வசிக்கிறார்கள். ஆகவே 61சதவீத மக்கள் தொகையை, அதாவது வருங்கால இந்தியாவான குழந்தை செல்வங்களை பாதுகாப்புடம், அனைத்து உரிமைகளுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும்.  

பெரும்பாலான பெற்றோர்கள் தனக்கு கிடைக்க தவறியதை தனது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என ஒரு தவறான எண்ணத்தில் அவசிய தேவை, அத்தியாவசிய தேவையை தாண்டி பாசம், அன்பு என்ற பெயரில் கொட்டி கொடுக்கிறார்கள் என்துதான் கூற வேண்டும். அதன் உண்மையான தேவைகளை உணர வையுங்கள். புரிந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். தனது குழந்தைகளுக்கு வெற்றி-தோல்வி, நல்லது-கெட்டது, சரி-தவறு, தேவை-அனாவசியம்  போன்றவற்றை பொறுமையாக சொல்லிக்கொடுங்கள்.

தனது குழந்தைகள் மனம், உடல், பாலியல் ரீதியாக பாதிப்பு அடையாமல் பாதுகாத்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் நம் குழந்தைகளுடன், குடும்பத்தினருடன் பேசுகிறோமா என்று கேட்டோம் என்றால் இல்லவே இல்லை என்ற பதில்கள் அதிகம் வரும். சற்று யோசித்து பாருங்கள் குழந்தைதகளிடம் நாம் கேள்வி கேட்கிறோம், ேபசுகிறோம். குழந்தைகளுடன் கலந்துரையாடல் செய்யுங்கள் விடுமுறை காலங்களில் நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள், நாம் நம் குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம், உழைக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. குழந்தைகளுக்கு உண்மையான ஏக்கம் இல்லாத மகிழ்ச்சியை கொடுப்போம் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவோம். அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்