SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

டாடா மின்சார நானோ கார்..!

2017-09-17@ 00:22:27

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா, நானோ காரை மின்சார திறனுக்கு மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த செய்தி வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காக கோவை ஊரக பகுதியில் மின்சார நானோ காருக்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது. டாடாவிற்கு நானோ ஒரு உணர்வுப்பூர்வமான தயாரிப்பு என்பதால் ரத்தன் டாடா முன்னிலையில் மின்சார நானோ காருக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதனுடைய முடிவுகளை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். மின்சார திறனுக்கு நானோ கார் மாற்றப்படுவதன் மூலம், டாடா மின்சார கார் உற்பத்தியில் தீவிரமாக இறங்குவது நிரூபனமாகியுள்ளது. லித்தியம்-இயான் பேட்டரிகளை கொண்டு நானோ மின்சார காருக்கான திறனை டாடா பொருத்தியுள்ளது.

டாடா உருவாக்கி வரும் மின்சார நானோ கார் மாடல் நகர பகுதிகளுக்கு ஏற்றவாறு கட்டமைப்போடு தயாராகி வருகிறது. மிகவும் மலிவான விலையில், அழகியல் சார்ந்த கட்டமைப்புகளுடன் மின்சார நானோ கார் மாடலை உருவாக்க வேண்டும் என்பதுதான் டாடாவின் நோக்கம். மின்சார திறனுக்கு வாகனங்களை மாற்ற மத்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்திய மக்களும் மின்சார வாகன பயன்பாட்டின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இந்நிலையில், மின்சார நானோ கார் அறிமுகமானால், அதன் சந்தை மதிப்பு அதிரடியாக உயரும் என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.இந்திய அரசும் மின்சார காரை ஊக்குவிப்பதில் ஊக்கம் காட்டுகிறது.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்