SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாருதி சுசூகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் கார்

2017-09-17@ 00:19:04

மாருதி சுசூகியின் சியாஸ் செடான் காரில் புதியதாக தயாராகியுள்ள ஸ்போர்ட்ஸ் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சியாஸ்-எஸ் என்ற பெயரில் மாருதி சுசூகி வெளியிட்டுள்ள இப்புதிய மாடல் கார், பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளில் வெளியாகியுள்ளது. எக்ஸ்-ஷோரூம் மதிப்புப்படி சியாஸ்-எஸ் பெட்ரோல் கார் மாடல் ரூ.9.39 லட்சம் விலை பெறுகிறது. டீசல் மாடல் கார் ரூ.11.55 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சியாஸ்-எஸ் காருக்கு ஸ்போர்ட்ஸ் மாடல் தோற்றம் வரவேண்டும் என்பதால் சக்கரங்கள் மிகவும் மெலியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதே தோற்றத்திற்காக ஸ்போர்டியர் பம்பர்கள், ரியர் ஸ்பாய்லர், சைடு ஸ்கெர்ட்ஸ் போன்றவை சியஸ்-எஸ் தோற்றத்திற்கு ஒரு முரட்டு வலிமையை சேர்க்கின்றன. டாப்-என்டு ஆல்பா வேரியண்ட் மாடலை பின்பற்றி புதிய சியாஸ்-எஸ் காரை மாருதி சுசூகி தயாரித்துள்ளது. சாம்பல் நிறத்திலான உள்கட்டமைப்புகளில் பிடிமானம் மற்றும் அவுட்லைன் க்ரோம் கொண்டு இழைக்கப்பட்டுள்ளது. சாம்பல் நிறத்திற்கு ஏற்றவாறு காரின் இருக்கைகள் கருப்பு நிறத்தில் உள்ளன. இதுபோன்ற தோற்றப்பொலிவுகள் காரை ஒரு ப்ரீமியம் தரத்திற்கு உணர வைக்கின்றன.

சியாஸ்-எஸ் காரின் பெட்ரோல் மாடலில் நான்கு சிலிண்டர் கொண்ட 1373 திறன் பெற்ற இன்ஜின் உள்ளது. இது, 91 பிஎச்பி பவர் மற்றும் 130 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல், டீசல் மாடல் காரில், 1248 சிசி திறன் பெற்ற நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் உள்ளது. இது, 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்தியாவில் சியஸ் மாடல் கார், மாருதி சுசுகி நிறுவனத்திற்கு என்று ஒரு நிலையான பிரபலத்துவமிக்க மாடலாக வலம் வருகிறது. தற்போது இதே மாடலில் வெளிவரும் சியாஸ்-எஸ் செடான் கார். இளைஞர்களை குறி வைத்து களம் காண உள்ளது. தனக்கான வாடிக்கையாளர் வட்டத்தை பெருக்கிக்கொள்ள மாருதி சுசுகி செய்யும் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. சியஸ்-எஸ் மாடலின் தோற்றம் மற்றும் செயல்திறன் நிச்சயம் அதற்கான பங்கை இந்திய சந்தையில் உருவாக்கும் என நம்பலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்