SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் அறிமுகமாகும் ரெனால்ட் கேப்டூர் கார்

2017-09-10@ 00:25:18

சர்வதேச அளவில் வரவேற்பு பெற்ற ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் எஸ்.யூ.வி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) கார் 2017-ன் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் கேப்டூர் காருக்கான டீசர் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக பேச வைத்துள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என இரு வேறு தேவைகளிலும் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. பெட்ரோல் மாடல் காரின் மூலம் சுமார் 102 பிஎச்பி பவர் கிடைக்கும் என்றும், அதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாஸ் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் மாடலில் இரண்டு வேரியண்டுகள் உள்ளன. அதில் ஒன்று 83.8 பிஎச்பி பவர் வழங்கும் திறன் பெற்றது. மற்றொன்று, 108 பிஎச்பி பவரை தரும். இதில் மாடல்களுக்கு ஏற்றவாறு டீசல் காரின் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கும். ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் கேப்டூர் மாடல் கார் ஃபிரெண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இருவேறு தேர்வுகளுடன் வெளியிட உள்ளது.

அதேபோல், தயாரிப்பு நிலையிலோ அல்லது எதிர்காலத்திலோ, சிவிடி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கேப்டூர் காரில் இடம்பெற வாய்ப்பும் உள்ளது. தொழில்நுட்பம், வெளிப்புற தோற்றம் என்றில்லாமல், உள்கட்டமைப்புகளிலும் சில நவீன வசதிகளை கேப்டூர் மாடல் பெற்றிருகிறது. இந்த காரில், அனைத்துவித கனெக்ட்டிவிட்டி தேர்வுகளுடன்கூடிய 7-இஞ்ச் இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், அதில் கிளைமேட்டிக் கன்ட்ரோலும் இடம்பெறும். இந்தியாவில் கேப்டூர் காரை வெளியிடுவது தொடர்பாக பேசிய ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுமித் சுவாஹ்னெ, “பிரீமியம் தரத்தில் கேப்டூர் நமது நாட்டில் வெளிவருவது மகிழ்ச்சி. சர்வதேச அளவில் மிக வரவேற்பு பெற்ற இந்த மாடல் இந்தியாவிலும் வெற்றியடையும்” என்றார்.

உலகளவில் மொத்தம் 10 லட்சம் கேப்டூர் எஸ்.யூ.வி மாடல் கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்திய வாடிக்கையாளர்களின் தேர்வுகளை கருதியே இந்த கார் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் மற்ற தயாரிப்புகளில் இருந்து கேப்டூர் காரை தனித்துக்காட்ட ரெனால்ட் பல்வேறு கஸ்டமைஸ் தேர்வுகளையும் தருவதாக கூறியுள்ளது. ஆரம்பமே அசத்தலாக அமைந்துள்ள இந்த காருக்கு, இந்தியாவில் இதுவரை 300 டீலர்கள் கிடைத்துள்ளனர். இதனால், தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு இந்த கார் வேகத்தை கூட்டியுள்ளது. இதன் மூலம் கேப்டூர் எஸ்.யூ.வி காருக்கான புதிய வாடிக்கையாளர்கள் நிறையபேர் வரலாம் என ரெனால்ட் கருதுகிறது. இந்தியாவில் எஸ்.யூ.வி ரக கார்களுக்கான விற்பனை உச்சத்தை அடைந்துள்ளது. அதை மேலும் வலிமையாக்கவே தற்போது ரெனால்ட் கேப்டூர் காரை அறிமுகப்படுத்துகிறது. ரெனால்ட் நிறுவனம். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்