SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸிப்ரானிக்ஸ் அறிமுகம் செய்யும் ஹெட்ஃபோன்கள் / இயர்ஃபோன்களுக்கான வயர்லெஸ் தொகுப்பு, ZEB-BE380T

2017-09-05@ 14:52:12

ZEB-BE380T தொகுப்பில் காதுக்குள் பொருந்தக்கூடிய இயர்ஃபோன்கள் இருப்பதால், எந்தவகை இயர்ஃபோனையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் தகவல் தொழில்நுட்ப துணை சாதனங்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்களை வழங்குவதில், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ஸிப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் விளங்குகிறது. தற்போது ஸிப்ரானிக்ஸ் ZEB-BE380T என்ற இயன்ஃபோன்களுடன் கூடிய புளூடூத் தொகுப்பை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த ZEB-BE380T புளூடூத் தொகுப்பானது பல இயர்ஃபோன்களைக் கொண்டிருப்பதால், எந்தவகை இயர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோனையும் இது வயர்லெஸ்ஸாக மாற்றும். வயர்லெஸ் ஆடியோ மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு, இந்த தயாரிப்பு ஓர் நீண்ட கால வரப்பிரசாதம். இந்த புளூடூத் மாடலானது 3.5mm ஜாக் உடன் வருவதால், இந்த அழகிய எடை குறைந்த தொகுப்புடன் உங்கள் இயர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோனை இணைத்தால் போதும், அவை முழுமையாக வயர்லெஸ்ஸாக மாறிவிடும்.

இந்த அழகிய புளூடூத் தொகுப்பில் மீடியா கட்டுப்பாட்டு பட்டன்கள் இணைக்கப்பட்டுள்ளதால், எளிதாக ஆடியோவை கட்டுப்படுத்தலாம். அத்துடன், MP3 பிளேபேக் வசதிக்காக மைக்ரோ SD ஸ்லாட் உள்ளது. இந்த தொகுப்புடன் வந்துள்ள இயர்ஃபோன்கள், உயர் தரத்துடன் கூடிய காதுக்குள் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், இரைச்ச்சல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, தரமான இசையை ரசிக்க முடியும். அத்துடன், இதில் வசதியான இயர் கப்புகள் மற்றும் மெட்டாலிக் வடிவமைப்பில் பின்புற அமைப்பு இருப்பதால், அழகுடன் காட்சியளிக்கிறது.

இந்த தொகுப்பானது கிளிப் வடிவமைப்பில் வருவதால், எந்த வகை ஆடையானாலும் எளிதாக கிளிப் போட்டு, செல்லுமிடமெல்லாம் இசையை ரசிக்கலாம். குறிப்பாக, ஓட்டப்பயிற்சி, தடகளப் பயிற்சி செய்பவர்கள் மற்றும் பயணம் செய்பவர்கள் இந்த தொகுப்பை மாட்டிக் கொண்ட பின் அழைப்புகள் வந்தால் தங்கள் ஃபோன்களை இழுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதே நேரம் பாடல்களையும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

இயர்ஃபோன்களுடன் கூடிய இந்த புளூடூத் தொகுப்பை அறிமுகப்படுத்திய, ஸிப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் திரு.பிரதீப் தோஷி கூறும்போது, ”புளூடூத் இயர்ஃபோன்கள் என்றாலே அது ஸிப்ரானிக்ஸ் தான்.  ஸிப்ரானிக்ஸின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக, ZEB-BE380T இணைந்துள்ளது. புளூடூத் இயர்ஃபோன்களின் சந்தையில் கால்பதித்துள்ள இந்த தயாரிப்பானது, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ’ஸ்மார்ட்’ வசதிகளைக் கொண்டுள்ளது. இசைப்பிரியர்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த தயாரிப்பை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று இசையை துல்லியமாக ரசிக்கலாம்” என்றார்.
 
இந்த தொகுப்பில் உள்ள புளூடூத் அலைவரிசை, 10 மீட்டர் சுற்றளவுக்கு தடையில்லாமல் இயங்கக்கூடியது. அத்துடன் இதில் உள்ள கிளிப் வடிவமைப்பு, மிக எளிதாக புளூடூத் இணைப்பை ஏற்படுத்தி, தடையில்லாத ஹேண்ட்ஸ் ஃப்ரீ இசை அனுபவத்தை அளிக்கிறது. இயர்ஃபோன்களுடன் கூடிய இந்த புளூடூத் தொகுப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை இணைந்த அழகிய வடிவத்தில், இந்தியா முழுவதுமுள்ள அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DURGAPOOJA

  உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

 • RUSSIALIGHT

  ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

 • tirupatibrammorchavam2017

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 • NIRMALASitharaman

  டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

 • sachinswach

  தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்