SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமருக்கு பிடிக்கும் என்பதால் டெல்லியில் யோகா செய்து விவசாயிகள் போராட்டம்

2017-08-21@ 18:50:24

புதுடெல்லி: டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் யோகா செய்து நூதன போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், நதிகளை இணைத்தல், வங்கி கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினம் ஒரு போராட்டம் அரங்கேற்றி வருகின்றனர்.

நேற்று விவசாயிகள் யாகம் வளர்த்து, நூதன போராட்டம் நடத்தினர். அப்போது, ஈஸ்வரனே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை கொடு என்று கோஷம் எழுப்பினர். இந்நிலையில் இன்று 37வது நாளாக போராட்டம் நடந்தது. காலை 10.30 மணியளவில் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் யோகா செய்து, நூதன போராட்டம் நடத்தினர். சர்வங்காசனம், பத்மாசனம், சூரியநமஸ்காரம் உள்ளிட்ட யோகா செய்தனர்.
இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், போராட்டம் துவங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

விவசாயிகள் போராட்டம் பிரதமர் கண்ணுக்கு தெரியாததால் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினோம். அப்போது தெரியவில்லை. நேற்று யாகம் நடத்தினோம். ஆனால் யோகா செய்தால் தான் மோடிக்கு பிடிக்கும் என்பதால் இன்று யோகா செய்து போராட்டம் நடத்தி வருகிறோம். இனியாவது பிரதமர் மோடி விவசாயிகளை திரும்பி பார்ப்பாரா என எதிர்பார்த்துள்ளளோம்.

இன்று மேனகாகாந்தி, வருண் காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவிக்க வர உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்களது ஏற்பாட்டில் இன்று ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றார். விவசாயிகள் நாராயணசாமி, பெரியசாமி ஆகியோர் இன்று 13 வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்