SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி டாக்டர் மனைவி கொலையில் கைது 2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு அடித்து கொன்றுவிட்டு நாடகம்

2017-08-01@ 00:04:41

மன்னார்குடி: மன்னார்குடியில் டாக்டர் மனைவி கொலை வழக்கில் எஸ்எஸ்ஐ உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பரபரப்பு  வாக்குமூலம் அளித்துள்ளனர். திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் முத்தழகன் (57).   இவருடைய மகன் இளஞ்சேரன் (32).  இவர்  திருச்சியில் ஒரு தனியார்  மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.  இளஞ்சேரனுக்கும்  சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற  கிராம  நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுடைய மகள் திவ்யா(25) என்பவருக்கும்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தநிலையில், கடந்த 17ம் தேதி  திவ்யா, தனது கணவர் வீட்டில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றபோது இறந்துவிட்டதாக  டாக்டர்கள் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து, வரதட்சணை  கொடுமையால் அடித்து கொன்றுள்ளனர் என்று  திவ்யாவின் பெற்றோர், மன்னார்குடி போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில், திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், அவரது பெற்றோர் முத்தழகன்-ராணி  ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் திவ்யா அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலைக்கு முத்தழகன் தனது  மைத்துனரான திருவாரூர் உணவு பாதுகாப்பு போலீசில் எஸ்.எஸ்.ஐ.யாக  பணியாற்றும் சிவக்குமார், அவரது நண்பர் லாரி டிரைவர்  செந்தில் என்கிற  செந்தில்குமார் ஆகியோரை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மன்னார்குடி டி.எஸ்.பி அசோகன் 2 தனிப்படைகள் அமைத்தார். இந்த தனிப்படையினர் குத்தாலத்தில் சிவக்குமாரையும், செந்திலை  கரூரிலும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின், 2 பேரிடமும் டி.எஸ்.பி. அசோகன் விசாரணை  மேற்கொண்டார். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது: முத்தழகனுடன் சேர்ந்து  திவ்யாவை அடித்து கொன்றதை இருவரும் ஒப்புக் கொண்டனர். கொலைக்காக முத்தழகன் 2 லட்சம் பேரம் பேசி, 1  லட்சத்தை  சிவகுமாரிடம் கொடுத்துள்ளார். இதில் சிவக்குமார் 10 ஆயிரத்தை செந்திலிடம் கொடுத்துள்ளார். செந்தில், மயிலாடுதுறையில் சொந்தமாக  எலக்ட்ரிக் கடை வைத்திருந்தபோது சிவகுமாருடன் நட்புஏற்பட்டது.

இவர்கள் ஒரு முறை மது அருந்தியபோது திவ்யாவை  கொலை செய்தால் தலா 1 லட்சம் தருவதாக சிவக்குமார் தெரிவித்தார். தற்போது எந்த  தொழிலும் இல்லாமல் வருமானமின்றி இருந்ததால் செந்தில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து திவ்யாவை அடித்து கொலை செய்துவிட்டு,  கொள்ளையர்கள் அடித்து கொலை செய்ததுபோல நாடகமாடி உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். விசாரணை முடிந்து 2 பேரையும் மன்னார்குடி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி விஜயன் முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில்   இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சசிகலாஇளவரசியின்உறவினர் திவ்யாவின் மாமனார் முத்தழகனின் தங்கை வளர்மதி.  இவர், சொத்துக்குவிப்பு  வழக்கில் பெங்களூர் சிறையில்  சசிகலாவுடன் இருக்கும்  இளவரசியின் அண்ணன்  வடுகநாதனின் மனைவி ஆவார்.  அந்த வகையில் அதிமுகவில் செல்வாக்கு பெற்றவராக முத்தழகன் வலம் வந்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்