SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்புற ஃபிளாஸ் கொண்ட மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போன்

2017-07-31@ 14:21:00

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் புதிய செல்ஃபி 2 ஸ்மார்ட்போனை பற்றி கடந்த வாரம் நிறுவனத்தின் சொந்த வலைத்தளத்தில் அறிவித்திருந்தது. இந்த மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சங்களாக, இதில் செல்ஃபி பிரியர்களுக்காக முன்புற ஃபிளாஸ், கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வருகிறது. ரூ.9,999 விலையுடைய இந்த மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனைத்து முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் வழியாக கிடைக்கும்.

டூயல் சிம் ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் மூலம் இயங்குகிறது. மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.20 இன்ச் எச்டி உடன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி DDR3 ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6737 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போனில் f/2.0 அபெர்ச்சர், எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் சாஃப்ட் ஃபிளாஷ் உடன் சோனி IM135 சென்சார், f/2.0 அபெர்ச்சர், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

டூயல் சிம்

பொது

வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
பேட்டரி திறன் (mAh): 3000
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை

டிஸ்ப்ளே

திரை அளவு: 5.20
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 720x1280 பிக்சல்கள்

ஹார்டுவேர்

ப்ராசசர்: 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6737
ரேம்: 3ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 32ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 64

கேமரா

பின்புற கேமரா: 13 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 8 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட்

இணைப்பு

Wi-Fi
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத்
ஜிஎஸ்எம்
3ஜி
4ஜி எல்டிஇ
மைக்ரோ-யூஎஸ்பி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்