SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் வீரசந்தானம் மாரடைப்பால் மரணம்

2017-07-14@ 00:02:47

சென்னை: பிரபல ஓவியரும் , குணச்சித்திர நடிகருமான வீரசந்தானம் (வயது70), சென்னையில்  நேற்று இரவு 8.15 மணியளவில் திடீர் மாரடைப்பு  காரணமாக மரணம் அடைந்தார்.இவர் பாலுமகேந்திரா இயக்கிய ‘சந்தியா ராகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  மேலும் ‘அவள் பெயர் தமிழரசி’, ‘கத்தி’,   ‘பீட்சா’ உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில்  நடித்தார். ஏராளமான குறும்படங்களிலும் நடித்தார். தமிழகத்தில்  பிரபல ஓவியராகத்  திகழ்ந்த அவருக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்தது. சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த வீரசந்தானத்துக்கு நேற்று மாலை மூச்சுத்திணறல்  ஏற்பட்டது.

 இதையடுத்து  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு திடீர்  மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நாளை அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.மறைந்த வீரசந்தானத்துக்கு மனைவி சாந்தி, மகள்கள் சங்கீதா, சாலிகா உள்ளனர். வீரசந்தானம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்.  சென்னையில் வசித்த  அவர், பல தமிழ் உணர்வு கூட்டங்களில் கலந்துகொண்டு,  தமிழர்கள் நலனுக்காகப் பேசியவர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்