SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலியாக உள்ள நாடகக்கலை அகாடமி இயக்குனர்கள் நியமனம்: மேலவையில் அமைச்சர் உமாஸ்ரீ பதில்

2017-06-20@ 01:18:27

பெங்களூரு: காலியாக உள்ள நாடகக்கலை அகாடமி இயக்குனர் பதவியை நிரப்ப அரசு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உமாஸ்ரீ கூறினார்.  மேலவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் எச்.எம். ரேவண்ணாவின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், கர்நாடகாவில் பல ஆண்டுகளாக நாடகக்கலை அகாடமியின் இயக்குனர்கள் பதவி காலியாக உள்ளன. மைசூரு நாடகக்கலை அகாடமிக்கு பகிரதி கதம், ஷிவமொக்கா நாடகக்கலை அகாடமிக்கு டாக்டர் எம். கணேஷ் மற்றும் கலபுர்கி நாடகக்கலை அகாடமிக்கு மகேஷ் வி. பாட்டீல் ஆகியோர் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தார்வாட் நாடகக்கலை அகாடமியின் இயக்குனர் பதவி காலியாக உள்ளது.

இந்த பதவியை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். மூன்றாண்டுகளில் மொத்தம் 80 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் காலியாக உள்ள 4 நாடகக்லை அகாடமியின் இயக்குனர்களை நியமனம் செய்யவேண்டும் என்றால், நாடகக்கலைக்குழுவினர் முடிவு செய்யவேண்டும். இவர்கள் சிபாரிசு செய்வோரை அரசு இயக்குனர்களாக நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும். நாடகத்துறையில் சேவை செய்தவர்களை இயக்குனர்களாக நியமிப்பதால் நிர்வாகம் செய்வதில் சுலபமாக இருக்கும் என்பதால் அவர்களை நியமனம் செய்ய சிபாரிசு செய்கின்றனர். ஆனால், எதிர்காலத்தில் இதுபோன்றவை நடக்காமல் இருக்கவும், நாடகக்கலைஞர்கள் மற்றும் நாடக்கலையை மேம்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் நாடக்கலை அகாடமியின் இயக்குனர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • jammu_modii111

    ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

  • AyodhyaDiwali

    அயோத்தி சரயு நதிக்கரையில் 1.75 லட்சம் விளக்குகள் ஒளிவெள்ளத்துடன் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்