SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டப்பேரவை தேர்தலில் சம்பங்கியின் குடும்பத்தினருக்கு டிக்கெட் வழங்க கூடாது: முன்னாள் நகர பாஜ தலைவர் கோரிக்கை

2017-06-20@ 01:17:35

தங்கவயல்:  தங்கவயலில் தனது அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த முன்னாள் நகர பாஜ தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக தங்கவயல் சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்த மூத்த பா.ஜ. கட்சியினரை முன்னாள் எம்.எல்.ஏ. ஒய். சம்பங்கி தள்ளி வைத்துள்ளார். அதே போல் எந்த முடிவு எடுத்தாலும் கட்சின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். இவரது நடவடிக்கையால் தங்கவயலை சேர்ந்த பா.ஜ. கட்சின் மூத்த தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் தொகுதியின் வளர்ச்சியில் செயலிழந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் ராமக்கா தங்கவயலுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டும் வந்து செல்கின்றார்.

இதனால் அரசு திட்டங்கள் எதுவும் ஏழை மக்களுக்கு கிடைப்பது இல்லை. அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ராமக்கா செயலிழந்துள்ளார். அதிகமான தலித் மக்கள் வசிக்கும் தங்கவயல் தொகுதியில் எம்.எல்.ஏ. ராமக்கா ஒருவருக்கு கூட வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று கொடுக்கவில்லை. அதே போல் சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் தங்கவயல் மக்களுக்கு செய்து கொடுக்கவில்லை. இதில் வாக்காளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கவயல் தொகுதியை சேர்ந்த பா.ஜ. கட்சியினர் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவை முதல்வர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணிகள் செய்து வருகின்றனர். இதனால் பா.ஜ. கட்சின் மேலியிடம் தங்கவயலை சேர்ந்த பா.ஜ. கட்சின் நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் கட்சின் தொண்டர்களுக்கு சக்தி கிடைக்கும். 2018-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒய். சம்பங்கி குடும்பத்தினருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கக்கூடாது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • JustinTrutto

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வருகை

  • 19-02-2018

    19-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்