SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் தவறு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: பேரவையில் அறிக்கை தாக்கல்

2017-06-20@ 01:16:19

பெங்களூரு: மண்டூருவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் தவறு நடந்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மண்டூருவில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டதால் தற்போது மலை போல் குவிந்தது. இந்நிலையில் நிலத்தடிநீரில் மாசு ஏற்பட்டுள்ளது. மண்டூரை சுற்றியுள்ள  பகுதி மக்களுக்கு பல்வேறு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவியதால், மாநகராட்சி சார்பில் சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டது.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி சார்பில் எட்டு ஏக்கர் நிலமும் மற்றும் நிதியுதவியும் வழங்கப்பட்டாலும் அந்த நிறுவனம் பணியை தொடங்கவில்லை. இந்த பிரச்னை பேரவையில் விவாதிக்கப்பட்டு தனி கமிட்டி அமைக்கப்பட்டது. மாலிகாரெட்டி தலைமையிலான இக்கமிட்டி நேற்று பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மண்டூருவில் குப்பையில் இருந்து  மின்சாரம் தயாரிக்க திட்டம் வகுக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு மாநகராட்சி சார்பில் நிதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது பணியை அங்கே தொடங்க வில்லை.

மண்டூருவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கவேண்டும் என்றும்  சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட நிலத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் மேலும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டு்ம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்