SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் ெதால்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு நிவாரண தொகை: எம்எல்ஏ வழங்கினார்

2017-06-20@ 01:14:13

சாம்ராஜ்நகர்: கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிவாரணம் மற்றும் ஓய்வுதியத்திற்கான உத்தரவு நகலை எம்எல்ஏ ஜெயண்ணா வழங்கினார்.  சாம்ராஜ்நகர் மாவட்டம், ெபாம்மா கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் தொல்லையால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டார் இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்ற மாநில அரசு இறந்த சின்னசாமி குடும்பத்திற்கு ₹5லட்சம் நிவாரணம் மற்றும் மாதந்தோறும் ரூ.2ஆயிரத்திற்கான பென்சன் உத்தரவு நகலை வழங்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ேநற்று எம்எல்ஏ ஜெயண்ணா இதை வழங்கினார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மக்களுக்கு பல்ேவறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் யாரும் கவலை கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும் இறந்த சின்னசாமி குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் பென்சனுக்காக உத்தரவு நகல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து கொண்டு அவர்கள் பொருளாதார ரீதியில் மேன்மையடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • jammu_modii111

    ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

  • AyodhyaDiwali

    அயோத்தி சரயு நதிக்கரையில் 1.75 லட்சம் விளக்குகள் ஒளிவெள்ளத்துடன் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்