SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவு தானியங்கள் வழங்காமல் பொதுமக்களை அலைகழிக்கவைக்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

2017-06-20@ 01:13:07

தங்கவயல்:  ரேசன் அட்டைகளுக்கு உணவு தானியங்கள் வழங்காமல் பொதுமக்களை அலைகழிக்கவைக்கும் நியாயவிலை கடை உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு வழங்கல், வினியோகத்துறை வாரியத்தின் துணை தலைவர் சீனிவாஸ் தெரிவித்தார்.  தங்கவயல் தாசில்தார் அலுவலகத்தில் ஓ.டி.சி. கார்டு பெறுவதற்காக அதிகமான பொதுமக்கள் வரிசையில் நின்றிருப்பதாக சீனிவாஸூக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த சீனிவாஸ் சம்பவ இடத்துக்கு வந்து வரிசையில் நின்றிந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை சந்தித்து காரணத்தை கேட்டார். அப்போது பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தில் வழங்கப்படும் ஓ.டி.சி. கார்டு பெற்று வந்து ரேசன் டிப்போவில் கொடுத்தால் மட்டுமே உணவு தானியங்கள் வழங்கப்படும் என டிப்போ உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றனர்.

 இதனால் சீனிவாஸ் உடனே தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சங்கர், வருவாய் துறை அதிகாரிகள், உணவு வழங்கல், வினியோகத்துறை அதிகாரிகள் இடையே கூட்டம் நடத்தி ஓ.டி.சி. கார்டுக்கும் ரேசன் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என நியாயவிலை கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: அரசு ஒன் டைம் சான்றிதழ் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. (ஆதார் எண் இணைப்பு திட்டம்) இந்த திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டால் வரும் நாட்களில் வருவாய், சாதி, இறப்பு சான்றிதழ்களுக்கு மக்கள் அலைய தேவையில்லை.

இதனால் இந்த திட்டத்தை பொதுமக்கள் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். நியாயவிலை கடைக்கும் ஓ.டி.சி. கார்ட் திட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதனால் டிப்போ உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய உணவு தானியங்களை சரியாக வழங்க வேண்டும். அப்படி வழங்காமல் பொதுமக்களை அலைகழிக்கவைப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். உடன் துறை அதிகாரிகள் நாகராஜ்கேலகினமனே, ராமசந்திரப்பா இருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • JustinTrutto

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வருகை

  • 19-02-2018

    19-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்