SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் மோதி பெண் பலி

2017-06-20@ 01:11:58

மண்டியா: மண்டியா மாவட்டம் மத்துர் தாலுகா தொபனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரமிளா (28), தனியார் நிறுவன ஊழியர். இவர் பெங்களூரு- மைசூரு சாலையில் உள்ள தனியார் ஆயுத ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று காலை,அதே கிராமத்தை சேர்ந்த சில்பா என்பவருடன் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது இவர்கள் சோமனஹள்ளி என்ற கிராமத்தின் அருகே சாலையை கடக்க முயற்சித்த போது அதே சாலையில் வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது.

 இதில் தூக்கி வீசப்பட்ட இவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட இவர்களை கிராமத்தினர் உடனே பெங்களூரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே பிரமிளா பரிதாபமாக இறந்தார். சில்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மத்துர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்