SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காசோலை மோசடி வழக்கில் அமைச்சர் சந்தோஷ்லாடுக்கு நீதிமன்றம் கடும் உத்தரவு

2017-06-20@ 01:10:52

பெங்களூரு: கன்னட திரைப்பட தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் ரூ.7.25 கோடியை அமைச்சர் சந்தோஷ்லாட் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கடந்த 2014ம் ஆண்டு திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்தோஷ்லாடுடன் நட்புறவு ஏற்பட்டது. தொழில் தொடர்பாக ராக்லைன் வெங்கடேஷிடம் சந்தோஷ்லாட் ரூ.6 கோடி கடன் பெற்றார். பல மாதங்கள் கடந்தும் வாங்கிய பணம் திருப்பிக்கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடன் தொடர்பாக இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதனிடையில் கடனை திருப்பி கொடுக்கும் வகையில் சந்தோஷ்லாட் காசோலையை ராக்லைன் வெங்கடேசுக்கு கொடுத்தார். அதை வங்கியில் செலுத்திய போது போதிய பணமில்லாமல் வாபஸ் வந்தது. இரண்டு, மூன்று முறை காசோலை வங்கியில் செலுத்தியபோதும் பணமில்லாமல் வாபஸ் வந்தது. அதை தொடர்ந்த சந்தோஷ்லாட் மீது பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம், நேற்று வழங்கிய உத்தரவில் மனுதாரரின் வாங்கிய கடன் தொகை ரூ.6 கோடியுடன் கூடுதலாக ரூ.1.25 கோடி சேர்த்து மொத்தம் ரூ.7.25 கோடி வழங்க வேண்டும். தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் மூலம் கடனை வழங்கவில்லை என்றால் சிறை தண்டனை அனுபவிக்கும் அச்சம் தொழிலாளர் நல துறை அமைச்சர் சந்தோஷ்லாட் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

  • busRAVCeinju10

    பைக், கார் ரேஸ் காலம் போயிடுச்சு... பஸ் ரேஸில் 2 கார்கள், இரண்டு பஸ் சேதம் : 10 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்