SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்த ஜூலை முதல் வாரத்தில் முதல்வர் டெல்லி பயணம்

2017-06-20@ 01:08:28

பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த முதல்வர் சித்தராமையா மற்றும் பரமேஸ்வர் ஆகியோர் ஜூலை முதல் வாரத்தில் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜூலை இரண்டாவது வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.  கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன் முதல்வர் சித்தராமையா பேட்டி அளிக்கையில், சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்திருந்தார். சட்டப்பேரவை கூட்டம் முடிய இன்னும் இரு தினங்கள் உள்ளது.

இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் முதல்வரின் அரசு இல்லமான கிருஷ்ணாவில் சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது யார் யாரை அமைச்சரவையில் சேர்ப்பது. குறிப்பாக பரமேஸ்வரின் முக்கிய பதவியான உள்துறை அமைச்சர் பதவியில் யாரை அமர்த்துவது என்பது போன்றவை தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

அதன்படி, அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து அனுமதி பெற முதல்வர் சித்தராமையா மற்றும் பரமேஸ்வர் ஆகிய இருவரும் ஜூலை முதல்வாரத்தில் டெல்லிக்கு பயணம் செய்ய முடிவு ெசய்துள்ளதாகவும், மேலிட தலைவர்கள் அனுமதி கிடைத்ததும், ஜூலை  இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சரவை விரிவாக்கம் மட்டும் இன்றி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாற்றம், மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் போன்றவை செய்யவும் முதல்வர் சித்தராமையா மற்றும் பரமேஸ்வர் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு: முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவிகாலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால், கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் இருக்கக்கூடாது என்பதற்காக புதியவர்களை அமைச்சர்களாக நியமிக்க சித்தராமையா விரும்புவதாக கூறப்படுகிறது. அதன்படி, ஊழல் பட்டியலில் இருப்பவர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதில் புதியவர்களை அமைச்சர்களாக நியமிக்கவும், சித்தராமையா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.  

இதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் அனுமதி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை தற்போது ஊழல் பட்டியலில் உள்ளவர்களை நீக்க மேலிடம் அனுமதி அளிக்கவில்லை என்றால், பரமேஸ்வரின் அமைச்சர் பதவி உட்பட காலியாக உள்ள 3 அமைச்சர் பதவிகளை நிரப்ப முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • JustinTrutto

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வருகை

  • 19-02-2018

    19-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்