SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி உணவு பொருட்கள் விற்பனை செய்தவர்களிடம் அபராதம்

2017-06-20@ 01:07:33

பெங்களூரு: மாநிலத்தில் உணவு பதார்த்தங்கள் மற்றும் ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் கலப்படம் செய்த சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர்களுக்கு ரூ. 3,38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ரமேஷ்குமார் கூறினார். மேலவையில் நேற்று ேகள்வி நேரத்தின் போது எம்.எல்.சி. பசவனகவுடா யத்னாலின் கேள்விக்கு சுகாதாரம் மற்றம் குடும்ப நலத்துறை அமைச்சர் ரமேஷ்குமார் பதில் அளிக்கையில்; பால், பழங்கள், காய்கறிகள், இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் ஓட்டல்களில் கலப்படம் செய்த உணவு பொருட்கள் வினியோகம் செய்வதாக அரசு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதன்பேரில், சம்பவ இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு நீதிமன்றம் ரூ. 3.38 லட்சம் அபராதம் விதித்துள்ளது. எனவே, பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்யும் விவகாரத்தில் விழிப்புடன் இருக்கவேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்