SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலத்தில் போலி டாக்டர்களை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம்: சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ்குமார் தகவல்

2017-06-20@ 01:06:01

பெங்களூரு: மாநிலத்தில் போலி டாக்டர்கள் அதிகரிப்பதை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான சட்டத்திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ரமேஷ்குமார் உறுதி அளித்தார்.  மேலவையில் நேற்று கேள்விநேரத்தின் போது, அமைச்சர் ரமேஷ்குமார் பதில் அளிக்கையில், பாரம்பரியமிக்க சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டு வைத்தியம் செய்ய அரசு அனுமதி அளித்து வருகிறது. இதற்காக பல்கலைக்கழகம் தொடங்கி அதன் மூலம் படித்து பட்டம் பெற்று உரிய முறையில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதற்காக ஆர்.எம்.சி. சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்களைப்போல சிலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், சிலர் போலி நாட்டுவைத்தியத்திற்கான சான்றிதழ்களை வைத்துக்கொண்டு சிகிச்சை அளிப்பதுடன் மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றனர்.

எனவே, இதுபோன்ற போலி டாக்டர்களை தடுப்பதற்காக அனைத்து  பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் அதிக அளவில் போலி டாக்டர்கள் உருவாகிக்ெகாண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போலி டாக்டர்களை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி இதுவரை மொத்தம் 2,869 போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். போலி டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்ெகாள்ளவேண்டும் என ஆயுஸ் மருத்துவமனை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. போலி டாக்டர்கள் அதிகரிப்பதை தடுக்க பாக்ஸ்போர்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நாட்டு வைத்தியர்களும் ஆயுஸ் மருத்துவமனையில் தங்களின் பெயர்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவேளை பதிவு செய்யாமல் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார். அப்போது குறுக்கிட்ட எம்.எல்.சி. பானுபிரகாஷ் பேசுகையில், ஷிவமொக்கா மாவட்டத்தில் 634 போலி டாக்டர்கள் இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், எதிர்காலத்தில் போலி டாக்டர்கள் உருவாகாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது என்பதை அமைச்சரின் கவனத்திற்கு ெகாண்டுவர விரும்புகிறேன் என்றார். ஷிவமொக்கா மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள போலி டாக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்ெகாள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்படும் என உறுதி அளிக்கிறேன் என அமைச்சர் உறுதி அளித்தார். ெதாடர்ந்து அமைச்சர் ரமேஷ்குமார் பேசுகையில், மாநிலத்தில் போலி டாக்டர்கள் அதிகரிக்க மருத்துவ துறையில் உள்ள சில குளறுபடியான சட்டங்களே காரணமாக அமைந்துள்ளது. இதை தடுக்கும் வகையில் விரைவில் மருத்துவம், சட்ட வல்லுனர்கள் மற்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்தி சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vinayagarCHARSGS

  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

 • OLdestCARexnbInchenn

  பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

 • chenniaEXBIHITIONday

  சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

 • deodhani_wishess1

  தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

 • busRAVCeinju10

  பைக், கார் ரேஸ் காலம் போயிடுச்சு... பஸ் ரேஸில் 2 கார்கள், இரண்டு பஸ் சேதம் : 10 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்