SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் ரமாநாத்ராய் விவகாரம் மேலவையிலும் எதிர்க்கட்சி தர்ணா: வீடியோ வெளியானதால் பரபரப்பு

2017-06-20@ 01:04:36

பெங்களூரு:  இந்து அமைப்பின் தலைவர் கல்லடுகா பிரபாகர் பட்டை தகாத வார்த்தைகளில் பேசியதுடன் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து கைது செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் ரமாநாத்ராய் உடனே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என மேலவையில் பாஜ போர்கொடி தூக்கி உள்ளனர். கடலோர மாவட்டத்தை சேர்ந்த இந்து அமைப்பின் தலைவர் கல்லடுகா பிரபாகர் பட்டை அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரமாநாத்ராய் தகாத வார்த்தைகளில் பேசியது மட்டும் இன்றி, அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கும் படி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரமாநாத்ராய்க்கு எதிராக போர்கொடி உயர்த்தினர். அத்துடன் அவரை ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இதனால், சட்டப்பேரவையில், பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மேலவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பாஜ எம்.எல்.சி.யும், நடிகையுமான தாரா அனுராதா உரிமை மீறல் பிரச்னை குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கடலோர மாவட்டங்கள் மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் இந்துக்களுக்கு எதிராக கர்நாடக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளது. இதனால், பாஜவை சேர்ந்தவர்களும், இந்த அமைப்புகளை ேசர்ந்தவர்களும் குறிவைத்து கொலை செய்யப்பட்டுவருகின்றனர். இதேபோல, கடலோர மாவட்டத்தை சேர்ந்த இந்து அமைப்பின் தலைவரான கல்லடுகா பிரபாகர் பட் மீது கர்நாடக அரசு வேண்டும் என்றே வன்முறை தாக்குதல்களை நடத்திவருகிறது. அரசின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. இந்து அமைப்பின் தலைவரை தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என அமைச்சர் ரமாநாத்ராய் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பது கண்டனத்துக்குறியது.

சட்டம் ஒழுங்கை காப்பாற்றவேண்டிய அமைச்சரே சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம். எனவே, சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் பேசிய அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.இதற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பதில் அளிக்கையில்: ஒருவரை அமைச்சர் கைது செய்யுங்கள் என போலீசாருக்கு கூறுகிறார் என்றால் போலீசாரும் உடனே கைது செய்துவிடுவதில்லை, அவர்மீது எந்த வகையில் தவறு இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னர்தான் கைது செய்கின்றனர்.

மாவட்டத்தில் அமைதியை காப்பாற்றவேண்டியது அமைச்சரின் கடமையாகும். எனவே, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதால் பிரபாகர் மீது நடவடிக்கை எடுக்கும் படி அமைச்சர் போலீஸ் உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதில் தவறில்லை. ஒரு அமைப்பின் தலைவராக இருப்பவர் எப்படி ேவண்டுமானாலும் பேசலாம் என்றில்லை. பேசுவதற்கு கூட வழிமுறை உள்ளது. இதேபோல் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பல முறை பேசிய குற்றத்திற்காக பிரபாகர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இது தவிர மேலும், பல விவரங்கள் அரசிடம் உள்ளது. அதை சபையில் தாக்கல் செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்