SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அமைச்சர் ரமாநாத்ராய் ராஜினாமா செய்ய வேண்டும்: பேரவையில் பாஜ போர்க்கொடி

2017-06-20@ 01:03:24

பெங்களூரு: போலீஸ் துறையில் தலையிட்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காகவும், இந்து அமைப்பு தலைவரை தவறாக பேசிய அமைச்சர் ரமாநாத்ராய் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தின.  பெங்களூரு விதான சவுதாவில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று காலையில் அவை கூடியது. கேள்வி-பதில் நேரத்திற்கு பிறகு பூஜ்ஜியம் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர், ஆர்எஸ்எஸ் பிரமுகர் கல்லடுக்கா பிரபாகர் பட் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று வனத்துறை அமைச்சர் ரமாநாத்ராய் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட போலீஸ் எஸ்பி.க்கு அமைச்சர் உத்தரவிட்ட வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. போலீஸ் விசாரணையில் தலையிட்டுள்ளதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், என்றார். எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர் இவ்வாறு பேசியதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அபயச் சந்திர ஜெயின், முகைதீன் பாவா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் ஆர்வி தேஷ்பாண்டே உள்ளிட்டோரும் அமைச்சர் ரமாநாத் ராய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் பேரவையில் சிறிது நேரம் காரசாரமாக விவாதம் நடந்தது.  

இது பற்றிய விவரம் : எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர்: போலீஸ் விசாரணையில் அமைச்சர்கள் தலையிடுவது தவறாகும். இதற்கு முன்பு போலீஸ் அதிகாரி அனுபமா ஷெனாய் ராஜினாமா செய்தார். போலீஸ் அதிகாரி கணபதி உள்ளிட்டோர் தற்கொலையிலும் ஆளுங்கட்சிக்கு பங்கு இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த பிரபாகர் பட் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று போலீஸ் அதிகாரிக்கு அமைச்சர் ரமாநாத் ராய் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரியிடம் பேசுகிற காட்சி தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அமைச்சர் ஒருவர் நேரடியாக போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். எனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கல்லடுக்கா சம்பவத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையே காரணம் என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்துள்ள அமைச்சர் ரமாநாத் ராய், பிரபாகர் பட்தான் முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார். போலீஸ் விசாரணையில் தலையிட்டு விசாரணை  திசை திருப்பியுள்ளதால் ரமாநாத் ராய் ஒரு நிமிடம் கூட அமைச்சர் பதவியில் நீடிக்கக்கூடாது.

பாஜக கொறடா சுனில்குமார்: சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக போலீசார் பணியாற்றி வருகிறார்கள். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய போலீஸ் துறையை அமைச்சர் தவறாக பயன்படுத்திவிட்டார். இது கண்டிக்க தக்கது. இது போன்ற செயலில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவை உறுப்பினர்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும்..  இதைத்தொடர்ந்து சபையில் ரமாநாத் ராய் பேசியதாவது: போலீஸ் அதிகாரியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசினோம் ? என்பதை முழுவதையும் கேட்டறிய வேண்டும். சில வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்டோர் பேசுவது தவறாகும்.

உடனே எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர் குறுக்கிட்டு, கொலை குற்றவாளிகள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் பேசியிருந்தால் பரவாயில்லை. பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் உத்தரவிடுவது எந்த வகையில் சரி... என்று பேசியதால் அவையில் மறுபடியும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் இடையே காரசார விவாதம் நடந்ததால் அவையில்  கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் கோலிவாட் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றாலும் இரண்டு தரப்பினரும் அதை கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சபாநாயகர் கோலிவாட், இருக்கையில் இருந்து எழுந்து நின்று உறுப்பினர்களுக்கு கடும் உத்தரவிட்டார். அதன்பிறகு அமைச்சர் ரமாநாத் ராய் விளக்கம் அளிக்கையில், “ கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். பிரபாகர் பட் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிடவில்லை. போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த

ஆலோசனை கூட்டத்தில், கொலை வழக்கில் தொடர்பு உடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கொலையாளிகளுக்கு உதவி செய்யும் நபர்களை விட்டுவிடக்கூடாது என்றுதான் கூறினேன். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் பிரபாகர் பட் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என கூறவில்லை. மங்களூரு  விருந்தினர் மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பிரபாகர் பட் மீது குறிப்பிட்டு கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூறவில்லை. ஒரு குடும்பத்தில் தந்தை காங்கிரஸ் கட்சியிலும் மகன் பாஜகவிலும் இருக்கலாம். அதுபோன்ற சம்பவங்களில் மகன் தவறு செய்தால் அதற்கு தந்தையை தொந்தரவு செய்யக்கூடாது, என்றேன். இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்தாலும் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்டோர், உள்துறை  அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அமைச்சர் பதவியை ரமாநாத்ராய் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் கோலிவாட், இந்த பிரச்னையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேரவையில் விவரம் தாக்கல் செய்யவார் என்று அறிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

  • busRAVCeinju10

    பைக், கார் ரேஸ் காலம் போயிடுச்சு... பஸ் ரேஸில் 2 கார்கள், இரண்டு பஸ் சேதம் : 10 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்