SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களைகட்டிய ஜனாதிபதி தேர்தல் எதிர்கட்சிகளால் கண்டுகொள்ளப்படாத ஏஏபி: ஓரங்கட்டப்பட்டதால் புலம்பும் தலைவர்கள்

2017-06-20@ 01:01:31

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி,எதிர்கட்சிகளால் கண்டுகொள்ளப்படாத கட்சியாக ஆம் ஆத்மி ஓரங்கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி தலைவர்கள் புலம்பி வருகின்றனர். குறிப்பாக, எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை அறிவிக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு கூட ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு அனுப்பப்படாதது தேசிய அளவில் அக்கட்சியின் முக்கியத்துவம் பற்றி கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17லும், 3 நாட்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை 20ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனிடையே, பாஜ சார்பில் வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளராக தலித் சமூகத்தை சேர்ந்தவரும் பீகார் மாநில கவர்னருமான ராம்நாத் கோவிந்தை அக்கட்சி நேற்று அறிவித்தது.

முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சிக்கான பேச்சுவார்த்தை பிரதான அரசியல் கட்சிகளிடையே கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் பலமுறை கூட்டப்பட்டு வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து விவாதித்தனர். ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அனைத்து கட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அழைக்கப்படவில்லை. ஆளும் பாஜவை கடுமையாக எதிர்த்து வரும் வேளையிலும் எதிர்கட்சிகள் தங்களை கண்டுகொள்ளவில்லை என ஆம் ஆத்மியினர் புலம்பி வருகின்றனர். ஆக மொத்தம் சூடு கிளப்பத் தொடங்கி உள்ள ஜனாதிபதி தேர்தலில், தனிமையில் ஓரங்கட்டப்பட்டு உள்ளோம் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் விரக்தியுடன் புலம்பத் தொடங்கி உள்ளனர்.

கண்டுெகாள்ளாத பாஜ

இதனிடையே, பாஜ அறிவிக்க உள்ள வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சி சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மியை பொருட்படுத்த தேவையில்லை என பாஜவும் கருதுவதாகவே தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவினாலும், பாரபட்சமின்றி ஆதரவு கேட்டுப் பெறுவது தேசிய அரசியலில் இயல்பானது. அப்படி இருந்தும் கெஜ்ரிவாலை பாஜ குழு இதுவரை சந்திக்காதது ஆம் ஆத்மியை தனிமைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தவிர்க்கும் காங்கிரஸ்

இதுதவிர, எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் எனும் சிந்தனை தோன்றியதும், காங்கிரஸ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்பட மாநில ரீதியில் பல்வேறு பிரதான கட்சிகள் ஆலோசனையைத் தொடங்கி உள்ளன. எனினும், டெல்லியில் கோலோச்சி வரும் ஆம் ஆத்மியை  காங்கிரஸ் கட்சி சிறிதும் கண்டுகொள்ளவில்லை. ஆம் ஆத்மியிடம் இருந்து விலகியிருப்பது எனும் கொள்கையில் தேசியவாத காங்கிரஸ் உறுதியாக உள்ளது. கட்சிக்கு தொல்லை அளித்து வருவதால், எதிர்கட்சி கூட்டணியில் ஆம் ஆத்மியை சேர்த்துக் கொள்வதில்லை என காங்கிரஸ் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அரசியல் ரீதியில் நல்ல நட்பு முறையில் இருந்து வருகின்றனர். மேற்குவங்கம், டெல்லி ஆகிய இரு மாநிலங்களிலும் முதல்வராக இருவரும் உள்ள நிலையில், பல்வேறு அரசியல் பிரச்னைகளை அவர்கள் அவ்வப்போது கலந்தாலோசிப்பது நடைமுறை வாடிக்கையாக உள்ளது. அப்படி இருந்தும் பொது வேட்பாளர் குறித்து இருவரும் இதுவரை ஆலோசனை நடத்தவில்லை என்பது அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள்

அதுபோல, மார்க். கம்யூ. பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் உள்பட பல கட்சித் தலைவர்களை முதல்வர் கெஜ்ரிவால் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். எனினும், அதில் பொது வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

ஆம் ஆத்மி புலம்பல்

இந்நிலையில் எதிர்கட்சிகள் எதுவுமே ஆம் ஆத்மியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையே எனும் விரக்தி அக்கட்சித் தலைவர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மியில் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் அரசியல் விவகாரக் குழு உறுப்பினரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் இது பற்றி கூறுகையில், ‘‘பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கக் கோரி முக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் எங்களை இதுவரை அணுகவில்லை’’, என புலம்பி உள்ளார். அரசும், எதிர்கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் என காத்திருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதோடு காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், அதே சமயம் எதிர்கட்சிகள் பொதுவாக அறிவிக்கும் வேட்பாளரை அழைப்பு விடுக்கும் பட்சத்தில் ஆதரிப்பது எனும் நிலைப்பாட்டில் ஆம் ஆத்மி இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்