SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூரை மீது சோலார் தகடுகள் பொருத்தும் பணி தொடக்கம்: டெல்லி அரசு அறிவிப்பு

2017-06-20@ 00:59:56

புதுடெல்லி: சூரிய மின்சக்தி கொள்கை 2016ன் கீழ், கூரை மீது சூரிய மின்சக்தி பேனல் பொருத்துவதற்கான பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி அரசு கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, மாநிலம் முழுவதும் சூரிய மின்சக்தி (சோலார் பவர்) பொருத்துவதை முக்கிய குறிக்கோளாக எடுத்து அறிவித்தது. அதற்காக, சூரிய மின்சக்தி கொள்கை 2016 என்ற திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி பேனலை வீட்டின் கூரை மீது பொருத்தும் நபருக்கு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் ஜெனரேஷன் அடிப்படையிலான ஊக்கத்தின் (ஜிபிஐ) கீழ், ஒரு யூனிட்டிற்கு ரூ.2 என்று மூன்று ஆண்டுகளுக்கு அந்த நபருக்கு வழங்கப்படும். சூரிய மின்சக்தி பேனல் பொருத்துவதற்காக, அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களை இந்திரபிரஸ்தா மின் நிறுவனம் நியமிக்கும். இதுபோன்ற, கொள்கைகள் அதில் அமைந்துள்ளன.

மேலும், கடந்த மாதம், மாநிலத்தில் சூரிய மின்சக்தி பேனல்கள் பொருத்துவதை ஊக்குவிக்கும் வகையில், திட்ட வரைப்படம் மற்றும் நிலையான இயக்க நடைமுறையை தயார் செய்யும்படி, மின்சாரத் துறைக்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டார். இந்நிலையில், சூரிய மின்சக்தி கொள்கை 2016ன் கீழ், கூரை மீது சூரிய மின்சக்தி பேனல் பொருத்துவதற்கான பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியதாக மாநில அரசு அறிவித்தது.

இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,” சூரிய மின்சக்தி கொள்கை 2016 மற்றும் டெல்லி மின் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்குமுறைகள் 2014ன் கீழ், குடியிருப்பு பகுதி, நிறுவனம், சமூகப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சூரிய மின்சக்தி பேனல் பொருத்துவதற்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பேனலை பொருத்த விரும்புபவர்கள், கொள்கையின் கீழ் வழங்கியுள்ள சலுகைகளை பெற முடியும். வரும் 2020ம் ஆண்டுக்குள், சூரிய மின்சக்தி மூலம் ஒரு கிகா பைட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’’  என்றார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indiaBLADEREMONCAL

    இந்தியாவிலேயே முதல் முறையாக வாலிபரின் மூச்சு குழாயில் பிளேடு துண்டுகள் அகற்றம்: ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை

  • cave_1_southh

    நீண்ட மண்டை ஓடு மற்றும் மூன்று விரல்களை கொண்ட விசித்திர மம்மி : குகையில் கண்டுபிடிப்பு

  • 29-06-2017

    29-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்