SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ வெளிநடப்பு: திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு

2017-06-19@ 18:41:57

சென்னை: சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர். தமிழக சட்டப்பேரவை 2 நாள் விடுமுறைக்குப் பின் இன்று காலை கூடியது. காலை 10 மணிக்கு கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நிலக்கோட்டை உறுப்பினர் தங்கத்துரை (அதிமுக) சுகாதாரத்துறை தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் சுகாதாரத்துறை தொடர்பான கேள்விகளை கேட்டனர். அதற்கும் அமைச்சர் பதில் அளித்தார். உறுப்பினர்கள் பேசியதைத் தொடர்ந்து, சபாநாயகர் அடுத்த துறை தொடர்பான கேள்வியை தொடங்குமாறு கும்மிடிப்பூண்டி உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமாரை பேச வலியுறுத்தினார்.

அப்போது திடீரென ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் எழுந்து, சுகாதாரத்துறை தொடர்பாக நானும் ஒரு கேள்வி கேட்க உள்ளேன். என்னை பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. சுகாதாரத்துறை தொடர்பான கேள்வியைத்தான் கேட்க உள்ளேன் என்று சபாநாயகரை வற்புறுத்தும் வகையில் பேசினார். இதனால் சபாநாயகர் தனபால் கோபமடைந்து என்னை யாரும், கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்றார். இதனால் கோபமடைந்த தங்கதமிழ்செல்வன், அவையில் இருந்து விர்ரென்று வெளியேறினார். அவர் வெளியேறியதைப் பார்த்து, அதிமுக உறுப்பினர்கள் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தனர். அதேநேரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள், மேஜையை தட்டி வரவேற்றனர்.

அதேநேரத்தில், ஆளும் கட்சி எம்எல்ஏவே திடீரென சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது, சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கதமிழ்செல்வன், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர். கடந்த சில நாட்களாக தினகரனுக்கு ஆதரவாக எம்எல்ஏக்களை அணிதிரட்டி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரவு எம்எல்ஏக்களுடன் சந்தித்து, தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில்தான், தங்கதமிழ்செல்வன், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • jammu_modii111

    ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

  • AyodhyaDiwali

    அயோத்தி சரயு நதிக்கரையில் 1.75 லட்சம் விளக்குகள் ஒளிவெள்ளத்துடன் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்