SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுஜாதா விருது வழங்கும் விழா

2017-05-03@ 01:26:14

சென்னை : பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3ம் தேதி உயிர்மை பதிப்பகமும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து தலைசிறந்த தமிழ் படைப்பாளிகளுக்கு இலக்கிய விருதுகளை வழங்கி வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருதிற்கு ஜி.கார்ல் மார்க்ஸ், அ.கரீம், சோ.தர்மன், கரன் கார்க்கி, நரன், ஜெ.பிரான்சிஸ் கிருபா, வெய்யில், அ.ராமசாமி, வி.முத்தையா, சரவண கார்த்திகேயன், ஷான் கருப்பசாமி ஆகிய 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, சிற்றிதழ், இணையம் ஆகிய துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்புகளைச் செய்த விருது பெற்றவர்களை வாழ்த்தி பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா, பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றவிருக்கிறார்கள். நிகழ்ச்சியில் இந்திரா பார்த்தசாரதி, இமையம், ந.முருகேசபாண்டியன், இந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். 18 பேரைக் கொண்ட தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளின் தேர்வுக்குழு இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இன்று மாலை 5.30க்கு சென்னை, மயிலாப்பூர், சி.ஐ.டி.காலனியில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் விருதளிக்கும் விழா நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்