SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு பாதிரியார் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி

2017-04-01@ 01:04:46

திருவனந்தபுரம் :  கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது பிளஸ் 1 மாணவி, பாதிரியாரால் சர்ச்சில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த மாணவிக்கு வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக ராபின் என்ற பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். பலாத்கார சம்பவத்தை மறைக்க, பாதிரியார் ராபினுக்கு உதவிய 5 கன்னியாஸ்திரிகள், மற்றொரு  பாதிரியார் உள்பட 8 பேர் போலீசில் சரணடைந்தனர். இதற்கிடையே குழந்தைக்கு தந்தை பாதிரியார் ராபின் தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர்.

இதற்காக பாதிரியார் ராபின், மாணவி மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் தலச்சேரி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், குழந்தையின் தந்தை பாதிரியார் ராபின் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்