SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் போலீஸ் அதிகாரி எழுதிய வீரப்பன் வேட்டை புத்தகம் வெளியீடு

2017-01-27@ 00:47:09

புதுடெல்லி: சந்தன கட்டை கடத்தல் மன்னன் வீரப்பனை வேட்டையாடியது பற்றி தமிழக சிறப்பு அதிரடி படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களை 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தவன் சந்தன கட்டை கடத்தல் மன்னன் வீரப்பன். கடந்த 1952ம் ஆண்டு கோபிநத்தத்தில் பிறந்த வீரப்பனின் வாழ்க்கை கடந்த 2004ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. தமிழக சிறப்பு அதிரடிப்படையினர், கடந்த 2004ம் ஆண்டு ‘ஆபரேஷன் பட்டுக்கூடு’ என்ற பெயரில் நடத்திய வேட்டையில் வீரப்பனை சுட்டுக்கொன்றனர்.

அப்போது அதிரடிபடைக்கு தலைமை வகித்தவர் விஜயகுமார்.  தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுகிறார். வீரப்பன் வேட்டை பற்றி  இவர் எழுதியுள்ள,  ‘வீரப்பன்: சேஷிங் தி பிரிகண்ட்’  என்ற புத்தகத்தை ரூபா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் வீரப்பனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி 108 நாள் பணய கைதியாக வைத்திருந்தது, வீரப்பன் வேட்டையில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்