SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காப்பக மாணவிகள் பலாத்காரம் நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

2016-12-29@ 01:27:34

நெல்லை : காப்பக மாணவிகள் 8 பேரை பலாத்காரம் செய்த நிர்வாகிக்கு 14  ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள  மூக்குப்பீறியில் லிட்டில் ஏஞ்சல்ஸ் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. அரசு அனுமதி பெற்று இக்காப்பகத்தை மூக்குப்பீறியைச் சேர்ந்த ஸ்டீபன்  ஜோசப் (53) என்பவர் நடத்தி வந்தார். இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 23 மாணவிகள், 19 மாணவர்கள் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர்.  இவர்களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை காப்பக நிர்வாகி ஸ்டீபன் ஜோசப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல மேலும் 7 மாணவிகளும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 8 மாணவிகள் தங்கள் பெற்றோருடன் 2012 ஜன.18ம் தேதி தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் முத்துவிநாயகத்திடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து நாசரேத் போலீசார், காப்பக  நிர்வாகி ஸ்டீபன் ஜோசப் மீது குழந்தை வதை தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், பலாத்காரம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் விசாரித்து,  ஸ்டீபன் ஜோசப்பிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இழப்பீடு தொகை கட்ட தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு அளித்தார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tvmalai

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

  • tvmalai

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

  • pslv_rocket111

    ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

  • sweeden_novbal1

    சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

  • brazil_venom11

    நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்