SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர்

2016-12-18@ 00:24:14

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் டியூசன் சென்டர் நடத்தி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவகுமார் (25), அவரது நண்பர் ஈஸ்வரன் (26), வீடியோ கடைக்காரரான மற்றொரு சிவகுமார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார்  டியூசன் சென்டர் ஆரம்பித்தார். பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது,  10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார். இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதைெதாடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி  திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில், 2014ல் தர்மபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டரை துவக்கினார். அங்கு குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவிகள் சிலர் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் தங்கள் லீலையை சிவகுமாரும் ஈஸ்வரனும் அரங்கேற்றினர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும் உல்லாசம் அனுபவித்தனர். இவற்றை செல்போனில் வீடியோவாக எடுத்து பார்த்து ரசித்தனர். பின்னர் பாலக்கோட்டில் மீண்டும் டியூசன் சென்டர் ஆரம்பித்து மாணவிகளை சிவகுமாரும், ஈஸ்வரனும் மயக்கி வந்தனர்.
இதனிடையே, தர்மபுரி டியூசன் சென்டர் உள்ள கட்டிடத்தில், செல்போன் கடை வைத்துள்ள மற்றொரு சிவகுமாருக்கு மாணவிகளின் ஆபாச வீடியோ தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சிவகுமார், ஈஸ்வரன், செல்போன் கடை ஓனர் சிவகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து, தினம் ஒரு மாணவியுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருந்து வந்தனர். 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.   இந்த தகவல் வெளியானதையடுத்து டியூசனுக்கு சென்று வந்த மாணவிகள் பலர் பீதியில் உறைந்துள்ளனர். பெற்றோரும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்