SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத போதகர் மீது பாலியல் புகார் கொடுத்த நெல்லை கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை

2016-10-24@ 00:46:14

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த டேவிட் மகன் ஜோசுவா இம்மானுவேல்ராஜ் (35). கிறிஸ்தவ மத போதகரான இவர் ஊர் ஊராக சென்று  பிரசங்கம் மற்றும் ஜெபம் செய்து வந்தார். அப்போது குடும்பத்தில் பிரச்னை இருப்பதாக கூறும் பெண்களிடம் ஜெபம் செய்தால் தீரும் என்று  கூறுவார்.இதை நம்பி தன்னை அழைக்கும் பெண்களுடன் நெருங்கி பழகி ஜெப கூட்டத்திற்கு அழைத்து செல்வதாக கூறி லாட்ஜில் அறை எடுத்து தங்க வைத்து ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக  மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஜோசுவா இம்மானுவேல்ராஜாவால் பாதிக்கப்பட்ட திருமணமான 3 பெண்கள் மற்றும் கல்லூரி மாணவி ஆகியோர் நெல்லை எஸ்பி விக்ரமனிடம் புகார் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி ஜோசுவா இமானுவேல்ராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் வினோத்குமாரை(23) கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஜோசுவா இமானுவேல்ராஜ் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததும்,  இவர் மீது கோவில்பட்டி, எட்டையபுரம், சென்னை ஆகிய ஊர்களில் பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் ஜோசுவா இமானுவேல்ராஜ் மீது பாலியல் புகார் கொடுத்த கல்லூரி மாணவியான தாழையூத்து பாப்பான்குளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் அனுசுயா(22) நேற்று அங்குள்ள தண்டவாளத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.தகவலறிந்த தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு மற்றும் நெல்லை ரயில்வே போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ilavarsar_pakisthn111

  பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

 • kavan_manavai11

  அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

 • seuol_expooo1

  தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

 • pumbkin_comp111

  அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

 • bday_day11

  ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்