SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது

2016-10-20@ 19:52:56

நெல்லை : நெல்லையில் பல பெண்களை ஏமாற்றி உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகரையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர். நீதிபதி உத்தரவின்பேரில் இருவரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்த டேவிட் மகன் ஜோசுவா இமானுவேல்ராஜ் (35). திருமணமாகாத இவர் பைபிள் வகுப்பு படித்தார். பின்னர் அதனை பாதியில் முடித்து விட்டு ஊர், ஊராக சென்று மத பிரசாரம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை அருகே உள்ள தாழையூத்திற்கு வந்தார். அங்கு வீடு, வீடாக சென்று பிரார்த்தனை செய்தார். அப்போது பாப்பாங்குளம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் அனுசுயா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு தாழையூத்தில் சொந்த வீடு இருப்பதாக கூறி அவரை அழைத்து வந்தார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி அவரிடம் இருந்து 3 பவுன் நகையை வாங்கினார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுசுயா கூறியபோது ஜோசுவா மறுத்து விட்டார். இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அனுசுயாவுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த போட்டோக்களை காட்டி அதனை இன்டெர்நெட்டில் வெளியிடுவதாக கூறி அனுசுயாவை மிரட்டினார். இதுகுறித்து அனுசுயா கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி போதகர் ஜோசுவாவையும் அவரது உதவியாளர் வினோத்குமாரையும் கைது செய்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட ஜோசுவா தன்னிடம் ஜெபம் பண்ண வரும் பெண்களை தனி அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்களை நிர்வாணமாக்கி ரசித்துள்ளார். மேலும் அவர்களின் நிர்வாண படங்களையும் எடுத்துள்ளார். விசாரணைக்கு பின் போதகர் ஜோசுவாவையும் அவரது உதவியாளர் வினோத்குமாரையும் நெல்லை ஜேஎம் 5 மாஜிஸ்திரேட் கார்த்திகேயனின் வீட்டில் நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் வருகிற நவ.2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trans_porattam

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

 • neru_park_chinnamalai11

  நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

 • stalin_dmk11

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

 • PlasticawarenessLondon

  லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 • stalin_arrestkaithu11

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்