SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனப்பகுதியில் 2,500 ஆண்டு பழமையான உருக்கு உலைகள் கண்டுபிடிப்பு

2016-09-30@ 12:10:45

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைகோட்டை அருகேயுள்ள வனப்பகுதியில் சமதள செம்பாறையில் சங்க காலத்தை சேர்ந்த 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலோக தொழிற்கூடத்தின் உருக்கு உலைகள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இயங்கிவரும் தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் தொல்லியல் வரலாறு மற்றும் மரபுசார் ஆர்வலர்களின் முயற்சியால் கலசமங்கலம், திருக்கட்டளை, பொற்பனைகோட்டைக்கு அருகாமையில் உள்ள வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மரபுவழிப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது செம்பாறையில் சங்க காலத்தை சேர்ந்த 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழரின் தொழில் நுட்பத்தை உலகறியச்செய்யும் உலோக தொழிற்கூடத்தின் உருக்கு உலைகள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது

இது தொடர்பாக பயணத்தின் அமைப்பாளரும், தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனருமான மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது: கி.மு 483ச்சார்ந்த வெள்ளித்தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை பழங்கால கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் அமைந்துள்ளதை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமின்றி  ஆர்மேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால உலோகத்தாது பிரிக்கும் அமைப்பு கி.மு 300 எனக்கணிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் கி.மு 1200 எனவும் இதுவே  மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகளில் பழமையானதாகவும் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள் ஆதிச்சநல்லூர், ஆழ்வார்திருநகரி, கொடுமணல் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக உருக்கு அமைப்புகள் பெரும்பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன.

தமிழகத்தில் செம்புராங்கற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது. இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மண்பாண்ட கலன்களிலேயே இருந்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலையானது, பாறையை துளையிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக இதனை கருதலாம். செம்புராங்கற்படுகையில் வெட்டப்பட்டுள்ள குழிகள் சுமார் இரண்டரை அடி மட்டுமே ஆழம் உள்ளது. இது இரண்டு வடிவங்களில் முழு வட்ட வடிவம் நீள் வட்ட வடிவம், இதில் உருக்கு உலை வட்ட வடிவத்துடன் உள்ளதோடு ஒரு அடி ஆழத்தில் நான்கு செ.மீ விட்டமுடைய துளை காணப்படுகிறது.

அதன் நேர் எதிராக மாடக்குழி போன்ற அமைப்பும் அதற்கு சற்று கீழாக வரிசையான நான்கு சிறு துளைகளையும் காணமுடிகிறது, தாதுக்களிலிருந்து பிரிக்கப்பட்ட தூய உலோக கட்டிகள் ஆயுதம் உள்ளிட்ட வார்ப்பு பொருட்கள் போன்றவற்றை குளிர்விக்கும் நீர்க்கலவை உள்ள தொட்டியாக இருந்ததை வெப்ப உலோக உருக்கு உலைகள் மூலம் உணர முடிகிறது. இங்கு ஆய்வு செய்துள்ள தொல்லியலாளர்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தகவல் பகிர்ந்துள்ளதன் அடிப்படையில் இந்த பழங்கால தொழிற்கூடத்தை 2500 ஆண்டுகள் பழமையானதாக கருதலாம்என்றார்.

generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்