SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி

2016-08-11@ 00:56:23

தூத்துக்குடி : தூத்துக்குடியில்  பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார்.  கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.  8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது. விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார்.

அங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர்  இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற  ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்ைல. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்.

2 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம்

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

sinemet megaedd.com sinemet
plavix plavix 300 plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்