SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை

2016-07-08@ 00:11:41

விழுப்புரம்,: விழுப்புரத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். இதில் திருமண மண்டபம் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய போது முன்னாள் மாவட்ட செயலாளர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால் ஆகியோர் தலைமையிலான பாஜகவினர் அங்கிருந்த மாவட்ட தலைவர் விநாயகம், கோட்ட பொறுப்பாளர் ரமேஷிடம் சென்று, கூட்டத்துக்கு எங்களுக்கெல்லாம் தகவல் தெரிவிக்காதது ஏன் என்றும், தொடர்ந்து தங்களை புறக்கணிப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மண்டபத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. அப்போது 3க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையில் போலீசார் மண்டபத்துக்குள் வந்தனர்.

இதனை தொடர்ந்து மாநில செயலாளர் ராகவன் தலைமையில் ஒரு மணிநேரம் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகளை தாக்கியதாகவும், மண்டபத்தை சூறையாடியதாகவும் மாவட்ட தலைவர் விநாயகம் அளித்த புகாரின் பேரில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

  • tejas_prr1

    அதிநவீன சொகுசு வசதிகளை கொண்ட தனியார் ரயிலான, தேஜஸ் அதிவிரைவு ரயிலின் பிரமிப்பூட்டும் படங்கள்

  • longestt_haiii1

    உலகின் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த குஜராத் மாணவி!!

  • loustt_afrriii11

    காப்பான் படப் பாணியில் ஆப்பிரிக்காவில் ‘லோகஸ்ட’ வெட்டுக்கிளி தாக்குதல்…! : உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்

  • kerlaa_cakke1

    கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கேக் வல்லுநர்கள் உருவாக்கிய உலகின் மிக நீளமான கேக் : வியக்கத்தக்க படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்