ஒசூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்து : 14 பேர் உயிரிழப்பு , 40 பேர் படுகாயம்
2016-06-03@ 16:50:43

மேலுமலை: கிருஷ்ணகிரி - ஒசூர் அருகே மேலுமலை என்ற இடத்தில் தனியார் பேருந்து மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் மேலுமலை கணவாய் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே சமயம் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி எதிர் திசையில் கடலை பாரம் ஏற்றிய லாரியானது வந்தது.
அப்போது லாரியானது தனது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பிகளை தகர்த்தெறிந்து எதிர்புறம் வந்து கொண்டிருந்த பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதனையடுத்து பேருந்தின் பின்னால் வந்த 2 கார்களும் அடுத்தடுத்து தனியார் பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து நேரிட்டது. லாரி - பேருந்து - 2 கார் இந்த வாகனங்கள் அனைத்தும் மோதி விபத்து நடந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தின் முன் பகுதியிலிருந்து பின் பகுதி வரை அப்பளம் போல நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
தொடர் வறட்சியால் தீவன தட்டுப்பாடு கால்நடைகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்கும் அவலம்
அமைச்சர் கே.சி.வீரமணியின் திருமண மண்டபத்தை நிர்வகிப்பவர் வீட்டில் கைப்பை சிக்கியது?: வருமானவரி சோதனையில் தகவல்
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
சிதிலமடைந்து சிதைந்து வரும் மாவூற்று வேலப்பர் கோயில்
அப்பர் ஆழியாரிலிருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் திறப்பு
கோடை வெயிலால் கடும் வறட்சி கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் சுத்திகரிக்கப்படுமா?
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு