SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1000 ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
2013-05-27@ 01:20:32

சிவகாசி : சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அய்யனார் கோயிலில் சேத்தூர் முத்தையா சுவாமிக்கு ஆயிரம் ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயிலுக்கு ராமநாதபுரம், அபிராமம், அகத்தாரிருப்பு, சிவகங்கை, இளையான்குடி பகுதிகளைச் சேர்ந்த 56 கிராமங்களில் இருந்து ஆறுகரை யாதவ சமுதாயத்தினர் 4 ஆண்டுக்கு ஒரு முறை மாட்டுவண்டியில் பயணித்து சுவாமி வழிபடுவது வழக்கம்.

இந்தாண்டு திருவிழாவுக்காக ஒரு பிரிவினர் ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன், எரிச்சீஸ்வரர் பொன் இருளப்பசாமி கோயிலுக்கும், இன்னொரு பிரிவினர் திருவில்லிபுத்தூர் அருகே மல்லி வீரகாளியம்மன் கோயில், மற்றொரு பிரிவினர் எம்.புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்றனர். கீழராஜகுலராமன், மல்லி சென்று வழிபாடு நடத்திய மக்கள் அசைவம் சாப்பிட்டதால் கூடமுடைய அய்யனார் கோயிலில் அபராதம் செலுத்துவது ஐதீகம். நேற்று முன்தினம் இங்கு வந்த அவர்களுக்கு எண்ணெய், சீயக்காய் கொடுத்து தலைமுழுக்கு நடத்தும் நிகழ்ச்சி மற்றும் அபராதம் வசூலிக்கும் நடக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

கூடமுடைய அய்யனாருக்கு செண்பகத்தோப்பு வனப்பகுதியில் இருந்து எடுத்து வந்த மலைக்கனிகளை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பேச்சியம்மன், ராக்காச்சி அம்மனுக்கு பெட்டி அரிசி, கோழி, முட்டை காணிக்கை வைத்து பூஜை, இதன்பின் 21 தெய்வங்களுக்கு வாய்க்கட்டி பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான சேத்தூர் முத்தையா சுவாமிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் நேற்று அதிகாலை பலியிடப்பட்டன.

ஆடுகளின் தலை, ஒரு காலை மட்டும் கோயிலில் பணி செய்வோருக்கு வழங்கிவிட்டு, வெட்டிய ஆடுகளை எடுத்துச் சென்று, விருதுநகர் செல்லும் வழியில் வெள்ளூர் கிராமத்தில் சமையல் செய்து சாப்பிடுவர். ஒரு வாரம் நடந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

cialis cvs coupon cialis cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்