SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரமாண்டமான முறையில் நடந்த சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா

2012-12-29@ 00:24:28

சென்னை : இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில், நேற்று முன்தினம் மிகப் பிரமாண்டமான முறையில் நடந்தது. இது முழுக்க, முழுக்க பெண்களை கவுரவிக்கும் விழாவாக நடத்தப்பட்டது. சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன. இத்தொடர்களில் நடித்த சிறந்த கலைஞர்கள் மற்றும் பணியாற்றிய சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், சன் டி.வியுடன் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன் விவரம் வருமாறு: வாழ்நாள் சாதனையாளர் விருது: டெல்லி குமார். நீண்ட நாட்களாக சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது: ராதிகா சரத்குமார்.
மற்றும் விகடன் டெலிவிஸ்டாஸ் பா.சீனிவாசன், விஷன் டைம்ஸ் ராமமூர்த்தி, அபிநயா கிரியேஷன்ஸ் ஜி.கிருஷ்ணமுர்த்தி, சினி டைம்ஸ் சவுந்தர்ராஜன், ஷான் மீடியா கபிலன், சரிகம பி.ஆர்.விஜயலட்சுமி, ஹோம் மீடியா சுஜாதா விஜயகுமார், யுடிவி சந்தோஷ் நாயர், திரு பிக்சர்ஸ் திருமுருகன், நிம்பஸ் குமார்.

நீண்ட நாட்களாக டி.வி தொடரின் நேரத்தை தக்கவைத்துக் கொண்டதற்கான விருது: ராதிகா சரத்குமார்.    
சிறந்த நடிகை சிறப்பு விருது: ரம்யா கிருஷ்ணன் (தங்கம்).
கதாநாயகன்: திருமுருகன் (நாதஸ்வரம்).
கதாநாயகி: அபிதா (திருமதி செல்வம்).
இயக்குனர்: எஸ்.குமரன் (தென்றல்).
தொடர்: ‘திருமதி செல்வம்’.
மாமனார், மாமியார்: மகாநதி சங்கர் (நாதஸ்வரம்), வடிவுக்கரசி (திருமதி செல்வம்).
மருமகன், மருமகள்: சதீஷ் (அத்திப்பூக்கள்),
ஸ்ரித்திகா (நாதஸ்வரம்).
பொருத்தமான ஜோடி: தீபக், ஸ்ருதி (தென்றல்).
ஒளிப்பதிவாளர்: வசீகரன் (செல்லமே).
எடிட்டர்: கணேஷ் (செல்லமே).
டப்பிங் கலைஞர்கள்: சங்கர் (செல்லமே),
ஜெயவித்யா (தங்கம்).
பெண்மையை உயர்த்தும் கவுரவ விருது: தேவயானி (முத்தாரம்).
சகோதரர், சகோதரி: ராதாரவி (செல்லமே),
அனுராதா (தங்கம்).
தாய், தந்தை: விஜி சந்திரசேகர் (அழகி),
மவுலி (நாதஸ்வரம்).
பின்னணி இசை: கிரண் (உதிரிப்பூக்கள்).
திரைக்கதை: அமிர்தராஜ், அமல்ராஜ்
(திருமதி செல்வம்).
வசனகர்த்தா: வாசு பாரதி (நாதஸ்வரம்).
நகைச்சுவை நடிகர், நடிகை: முனீஸ்ராஜ் (நாதஸ்வரம்), காவேரி (தங்கம்).
வில்லன், வில்லி: பாலாசிங் (முத்தாரம்),
ராணி (அத்திப்பூக்கள்).
துணை நடிகர், நடிகை: பொள்ளாச்சி பாபு (தங்கம்), சந்தியா (அத்திப்பூக்கள்).
விழாவில் நடிகைகள் லட்சுமி ராய், ஆண்ட்ரியா, ஓவியா, பிரணீதா, மதுஷாலினி, பிந்து மாதவி, அனுயா ஆகியோருடன் டி.வி நடிகர்கள் ஸ்ரீ, சஞ்சீவ், தேவ், வெங்கட் ஆகியோர் இணைந்து ஆடினர்.
நிகழ்ச்சிகளை தீபக், ஐஸ்வர்யா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இடையிடையே மதுரை முத்து, இமான் அண்ணாச்சி தோன்றி காமெடி நிகழ்ச்சி நடத்தினர்.
தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள், இயக்கு னர்கள், டி.வி கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
plavix tonydyson.co.uk plavix plm
cialis cvs coupon cialis cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2019

  20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்