SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தான மூன்று விஷயங்கள

2014-07-08@ 10:02:55

யூத் சாதனையாளர்கள்....

* கவிக்குயில் சரோஜினிதேவி தமது 13ம் வயதிலேயே 1300 அடிகளையுடைய கவிதையை ஆறே நாட்களில் இயற்றி சாதனை படைத்துள்ளார்.
* வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களை போதிக்க ஆரம்பித்தபோது, கன்பூஷியஸின் வயது 22
* ‘ஏழை மக்கள்’ என்ற முதல் நாவலை ரஷ்ய நாவலாசிரியரான தாஸ்தாவஸ்கி வெளியிட்டபோது அவருக்கு வயது 25.
* ‘வெர்தரின் துயரங்கள்’ என்ற பிரசித்தி பெற்ற நாவலை ஜெர்மானிய மேதையான கதே வெளியிட்டபோது அவருக்கு வயது 25.
* இனிய கவிதைகளை வடித்த கீட்ஸ், தம்முடைய 25 வயதிற்குள் 16,000 வரிகளைக் கவிதைகளாகப் பாடினார்.
* வானொலியைப் படைத்த மார்கோனி வான்புகழ் பெற்றது, 27 வயதில்.
* மாவீரன் நெப்போலியன் படைத் தளபதியானது தன்னுடைய 24வது வயதில்தான்.
* காரல் மார்க்ஸ் ‘மூலதனம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியபோது அவரது வயது 23.
* புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்த போது நியூட்டனுக்கு வயது 24.
* அலெக்சாண்டர் கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது அவருக்கு வயது 29.
* வில்லியம் பிட் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றபோது அவருக்கு வயது 24.
* முதல் விண்வெளி வீரரான யூரி காகரின் தன் சாதனையைச் செய்தபோது அவருக்கு வயது 27.

முடியால் அவிழ்ந்த மர்மம்

மாவீரன் நெப்போலியன் இறந்த ஆண்டு 1821. அவர் இறப்பிற்குக் காரணம் வயிற்றுப் புற்றுநோய் என கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் அப்போதே நினைத்தார்கள். அதற்கு சாட்சியாக நெப்போலியன் தனது  உயிலில் ‘பிரிட்டிஷ் கூலிப் படையினரால் எனது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நெப்போலியனை நேரடியாக மோதிக் கொல்ல முடியாது. அதனால் மற்றவர்கள் அறியாதபடி ஆர்சனிக் விஷத்தைக் கொடுத்து அவரைக் கொன்றிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் வலுத்தது. இந்நிலையில், அந்த மாவீரன் இறந்து சுமார் 200 ஆண்டுகள் கழித்து ஸ்மித் மற்றும் ஷப்வுட் என்ற விஞ்ஞானிகள் இந்த ஆர்சனிக் சந்தேகத்தை நூல் பிடித்து ஆராய ஆரம்பித்தார்கள். நெப்போலியனின் மரணத்திற்குப் பின்னர் வெட்டியெடுக்கப்பட்ட அவரது தலைமுடி கிடைத்தது. அதை கதிர்வீச்சு சோதனை செய்தார்கள்.

நெப்போலியனின் தலைமுடி யில் இயல்பான அளவைவிட 13 மடங்கு அதிக அளவு ஆர்சனிக் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. அதன்படி நெப்போலியன், ஆர்சனிக் என்னும் மெல்லக்  கொல்லும் விஷத்தால் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல, முடியையே ஆயுதமாகக் கொண்டு நெப்போலியன் மரணத்தின் மர்ம முடிச்சை அவிழ்த்துள்ளார்கள்!  

சுத்தம் செய்யும் பாக்டீரியா


சாக்கடைகளில் தேங்கும் கழிவுநீரின் துர்நாற்றத்திற்குக் காரணம், அவற்றின் மேற்பரப்பில் காணப்படும் எண்ணெய் போன்ற கொழுப்புப் பொருட்களே. கழிவுநீரிலுள்ள இந்த எண்ணெய்ப் பசையை நீக்கும் புதிய பாக்டீரியாவை இங்கிலாந்திலுள்ள விரிடியன் பயோ ப்ராஸசிங் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பாக்டீரியாக்கள் அடங்கிய தொட்டியில் கழிவுநீரை விடும்போது, பாக்டீரியாக்கள் ஒருவித நொதியை உண்டாக்கி கொழுப்பை அகற்றுகின்றன. மேலும் கழிவுநீரின் துர்நாற்றத்தையும் இவை அகற்றுகின்றன. இந்த பாக்டீரியா உயிர்வாழ சிறிய அளவு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் இட்டால் போதுமானது. பிரிட்டனில் பல உணவு விடுதிகளில் இந்த ரக பாக்டீரியாக்கள் சுத்திகரிப்பு பணியைச் சிறப்பாக செய்து வருகின்றன. தேவையான அளவுக்கு இந்த பாக்டீரியாக்கள் மற்றும் நொதிகள் லண்டன் கடைகளில் கிடைக்கின்றன.

இந்த பாக்டீரியாக்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே இயற்கை ஆர்வலர்களும் இதை வரவேற்கிறார்கள். செலவும் குறைவு, உபயோகிக்கும் முறையும் எளிமையாக இருப்பதால் ‘சுத்திகரிக்கும் பாக்டீரியாவுக்கு’ பிரிட்டனில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தகைய பாக்டீரியாக்கள் இந்தியாவிற்கு எப்போது வருமென்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும் சென்னை மாநகரின் ஜீவநதியான கூவத்தை சுத்தம் செய்ய மட்டும் எத்தனை டன் பாக்டீரியாக்களைக் கொட்ட வேண்டி யிருக்குமோ!?

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
is there a cure for chlamydia phuckedporn.com home std test
drug coupon card prostudiousa.com drug discount coupons
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்