SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 30 தீவிரவாதிகள் பலி

2014-06-22@ 03:11:30

இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 30 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகளை நடத்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும் சமீப காலமாக உள்நாட்டில் தீவிரவாதச் செயல்கள் தலைதூக்கியுள்ளதால் பாகிஸ்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தெஹ்ரிக்,இ,தாலிபான் (டிடிபி) தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கராச்சி விமான நிலையத் தாக்குதல் சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தீவிரவாதிகளின் செயலை முழுமையாக ஒடுக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆபரேஷன் ‘சர்ப்,இ,அஸ்ப்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள ஹாசுகெல் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோன்று பாகிஸ்தான்,

ஆப்கன் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வான்வெளித்தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 260 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தரை வழியே ராணுவத்தினர் நெருங்காத வகையில் தீவிரவாதிகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கு இடையேயான தாக்குதலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே தாலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது.

my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
drug coupon card prostudiousa.com drug discount coupons
sinemet megaedd.com sinemet
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்