SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிரியா எல்லை பகுதியை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்.
2014-06-22@ 03:10:39

பாக்தாத்: ஈராக்,சிரியா எல்லையில் உள்ள பகுதியை ஈராக் அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கைப்பற்றியது. இதன் மூலம் சிரியா வழியாக தனக்குத் தேவையான ஆயுதங்களைக் கொண்டு வர தீவிரவாத அமைப்புக்கு சுலபமான வழி கிடைத்துள்ளது.
தீவிரவாத அமைப்புக்கு எதிராகப் போராடி வரும் ஈராக் அரசுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரை, அரசியல் ரீதியாகத்தான் சமாளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈராக்கின் ஷியா முஸ்லிம் பிரிவு தலைவர் ஆகியோர் கூறியுள்ள நிலையில், பதவியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளார் ஈராக் பிரதமர் நூர் அல் மாலிகி. ஈராக்கில் ராணுவத்துக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவினர், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்புடன் இணைந்து சண்டையிட்டு வருகின்றனர்.

ராணுவத்துக்கு ஆதரவாக ஷியா முஸ்லிம் பிரிவினர் போராடி வருகின்றனர். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ராணுவத்திடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களுடன் அவர்கள் ராணுவத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். ஷியா முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள பல பகுதிகளை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அதைத் தவிர 40 இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினரை தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ளனர். தலைநகர் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த வான்வெளி தாக்குதல் நடத்த உதவும்படி அமெரிக்காவை ஈராக் அரசு கோரியது. ஆனால் தனது படைகளை திரும்ப அனுப்புவதில்லை என்று அமெரிக்கா உறுதியுடன் கூறியுள்ளது.

இந்த நிலையில் ஈராக்கின் நினேவா மாகாணத்துக்கும், சிரியாவின் அல்,ஹசேகா மாகாணத்துக்கும் இடைப்பட்ட மிகப் பெரிய பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மிகப் பெரிய மணல்குன்றை தகர்த்து, சிரியாவிலிருந்து ஈராக்குக்கு சுலபமாக வந்து செல்ல தீவிரவாதிகள் வழி செய்துள்ளனர். ஏற்கெனவே சிரியாவில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு, தற்போது சிரியாவிலிருந்து ஆயுதங்களை சுலபமாக ஈராக்கிற்கு கொண்ட வர வழி ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்கு நெருக்கடி

இதனிடையில் ஈராக் பிரதமர் நூரி அல்,மாலிகிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களை கைப்பற்றி வருகின்றனர். மறுபுறம் போரை முடிவுக்குக் கொண்டு வர அரசியல் ரீதியிலான நடவடிக்கையே உகந்தது என்று அமெரிக்கா மற்றும் ஷியா முஸ்லிம் மதத் தலைவர் அயதுல்லா அலி அல்,சிஸ்தானி ஆகியோர் கூறியுள்ளனர். ஈராக்கின் ஷியா முஸ்லிம் பிரிவினரின் நம்பிக்கைக்கு உரியவரான 86 வயதாகும் அல்,சிஸ்தானி, கடந்த வாரம் ஈராக்கை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். அதையடுத்து ஷியா முஸ்லிம் பிரிவினர் கருப்பு நிற உடைகளுடன் “அமைதிப் படை“ என்ற பெயரில் ராணுவத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

 “ஆனால் அல்,சிஸ்தானி அனைத்து ஈராக்கிய மக்களுக்கும் தான் இந்த கருத்தை கூறியிருந்தார். அதாவது பழைய பகையை மறந்து, அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான அரசு அமைந்து ஈராக்கில் நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும்“ என்று அவருடைய அலுவலகம் கூறியுள்ளது. “நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான ஆட்சியை அமைக்கும் தலைமையே தற்போது ஈராக்கிற்கு தேவை“ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். அதையடுத்து தற்போது பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்கு அல்,மாலிகி தள்ளப்பட்டுள்ளார்.

அவ்வாறு அவர் பதவி விலகினால், அங்குள்ள அரசியலமைப்பு சட்டப்படி அதிபராக உள்ள குர்த் இனத்தைச் சேர்ந்த ஜலால் தலபானி பிரதமராக பதவியேற்பார். புதிய அரசு அமையும்வரை அந்த பதவியை அவர் கவனிக்க வேண்டும். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து ஜெர்மனியில் தலபானி சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் துணை அதிபராக உள்ள ஷியா பிரிவைச் சேரந்த குதீர் அல்,குசாயி, பிரதமராகப் பதவியேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் முன்னாள் துணை அதிபர் அதெல் அப்துல்,மக்தி, சதாம் உசைனுக்குப் பிறகு முதல் பிரதமராக இருந்த அயத் அலாவி ஆகியோரும் பிரதமராக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

coupons for cialis printable site free discount prescription cards
prescription coupon card go viagra online coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்