SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்றத்தில் பேச மோடிக்கு அழைப்பு விடுக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவ

2014-06-22@ 02:39:33

வாஷிங்டன்: வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை, நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த மதக் கலவரத்தில் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தை தடுக்க தவறியதால் முதல்வர் மோடிதான் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவருக்கு விசா கொடுக்க மறுத்த அமெரிக்கா, தற்போது தனது நாடாளுமன்றத்தில் பேச அவருக்கு அழைப்பு விடுக்க உள்ளது குறிப்பிடதக்கது. கடந்த 2002ல் குஜராத் படுகொலையை காரணம் காட்டி, 2005,ல் மோடிக்கு விசா அளிக்க அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு அனுமதி மறுத்தது. இதனிடையில் 2010,ல் இந்திய உச்சநீதிமன்றம் இச் சம்பவத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று தீர்ப்பு அளித்தது.

கடந்த மாதம் பிரதமராக மோடி பதவியேற்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்கா வரும்படி அழைப்பும் விடுத்தார். அதன்படி, செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்ல மோடி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி எம்.பி.யும், வெளியுறவு விவகாரக் குழுவை சேர்ந்தவருமான எட் ராய்ஸ், சபாநாயகர் ஜான் போஹ்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தெற்கு ஆசியாவில், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவைவிட மிகச் சிறந்த உறவு நாடு இருக்க முடியாது. அதனால் செப்டம்பரில் வருகைதரும் நரேந்திர மோடியை நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேச அழைக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் சில எம்.பி.க்களும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு போஹ்னர் இன்னும் பதிலளிக்கவில்லை.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
sinemet go sinemet
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke abilify maintena abilify and coke
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2018

  11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்