SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரிகார பூஜை என்ற பெயரில் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி சில்மிஷம

2014-06-17@ 14:17:55

ராமநாதபுரம்: பரிகார பூஜை என்ற பெயரில் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி சில்மிஷம் செய்துவந்த அதிமுக ஜெ. பேரவை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (35). இவர் அதிமுகவில் தேவிப்பட்டினம் கிளை ஜெயலலிதா பேரவை செயலாளர். அங்குள்ள நவபாஷாண கோயிலில் பரிகார பூஜை செய்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்ததால் பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன் அழைத்து வந்தனர்.

பெண்ணை மட்டும் நவபாஷாண  கோயிலுக்குள் கணேசமூர்த்தி தனியாக அழைத்து சென்றார்.  கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளது. கோயில் சிலைகளின் ஒரு பகுதி கடல் நீரில் மூழ்கியபடி இருக்கும். அங்கு செல்ல வேண்டுமானால் தனியாக நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.  பூஜை செய்யும்போது அருகே யாரும் இருக்கக்கூடாது எனகூறியும் இளம் பெண்ணை மட்டும் கோயில் வளாகத்திற்குள் கணேசமூர்த்தி தனியாக அழைத்து சென்றுள்ளார். கோயில் வளாகத்திற்குள் இறங்கிவிட்டால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால் சரியாக பார்க்க முடியாது. இரவு 8 மணி என்பதால் எதுவும் தெரியாது. இதைப்பயன்படுத்திக்கொண்ட கணேசமூர்த்தி பரிகார பூஜை செய்வதாக கூறி அழைத்துச்சென்ற அந்த பெண்ணை நிர்வாணமாக்கியுள்ளார்.

சிறிய லிங்கத்தை வைத்து பெண்ணின் உடல் முழுவதும் மாறி, மாறி 108 முறை தடவிக்கொடுத்தது போல் காட்டி சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். ஊருக்கு சென்றதும் இதுகுறித்து அந்தப் பெண் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட  பெற்றோரும், உறவினர்களும் கொதித்துப்போனார்கள். தேவிபட்டினத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு கற்பூரசுந்தரம் என்பவர்தான் பரிகார பூஜைக்காக கணேசமூர்த்தியை சிவகங்கையை சேர்ந்த பெண்ணின் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரிடம் இந்த தகவலை பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கற்பூரசுந்தரம், கணேசமூர்த்தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார். அப்போது கற்பூரசுந்தரத்தை தாக்கிய கணேச மூர்த்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது குறித்து கற்பூரசுந்தரம் தேவிபட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் பெண்ணுக்கு நடந்த சில்மிஷ கொடுமைகளையும் விரிவாக தெரிவித்துள்ளார். கணேசமூர்த்தியை போலீசார் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மட்டும் இன்று கைது செய்தனர். பெண்ணை நிர்வாணப்படுத்தி மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. இதையறிந்த தேவிபட்டினம் பாஜ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் தேவிபட்டினம் போலீசில் தனியாக புகார் அளித்துள்ளார். இதில், யாத்திரை வந்த பெண் பக்தரிடம் மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து கணேசமூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இரவில்தான் பூஜை

கணேசமூர்த்தி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு: யாத்திரை வந்த பெண் பக்தர்களிடம் இதுபோன்று சில்மிஷங்களை தொடர்ந்து கணேச மூர்த்தி செய்து வந்துள்ளார். வெளியூர் பக்தர்கள் என்பதால் வெளியே சொன்னால் தங்களுக்குத்தான் பிரச்னை என கருதி மவுனமாக சென்றுள்ளனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கணேசமூர்த்தி தொடர்ந்து இத்தகைய நிர்வாண பூஜை என்ற பெயரில் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். இளம்பெண்கள் என்பதால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்வாராம்.

அப்போதுதான் பெண்ணின் உறவினர்களுக்கு தெரியாமல், கோயில் மறைவில், கடலுக்குள் தனது இஷ்டப்படி சில்மிஷங்களை செய்ய முடியும் என்பதால் இந்த டெக்னிக்கை கையாள்வாராம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

how do abortion pill work pristineschool.com misoprostol abortion

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-09-2017

  27-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • DURGAPOOJA

  உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

 • RUSSIALIGHT

  ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

 • tirupatibrammorchavam2017

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 • NIRMALASitharaman

  டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்